பள்ளி மாணவர்கள் அவதி| Dinamalar

பள்ளி மாணவர்கள் அவதி

Added : நவ 15, 2021
Share
பொங்கலுார்: பொங்கலுார் பஸ் ஸ்டாப் அருகே ரோட்டோரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பஸ் ஸ்டாப் அருகில் உள்ள பி.வி.கே.என்., மேல்நிலைப்பள்ளிக்கு பல்வேறு ஊர்களில் இருந்து பல மாணவர்கள் பஸ்சில் வருகின்றனர்.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால், பள்ளி மாணவர்கள் பஸ்சில் இருந்து கீழே இறங்கு வதற்கு அவதிப்படுகின்றனர். அவர்கள்

பொங்கலுார்: பொங்கலுார் பஸ் ஸ்டாப் அருகே ரோட்டோரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பஸ் ஸ்டாப் அருகில் உள்ள பி.வி.கே.என்., மேல்நிலைப்பள்ளிக்கு பல்வேறு ஊர்களில் இருந்து பல மாணவர்கள் பஸ்சில் வருகின்றனர்.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால், பள்ளி மாணவர்கள் பஸ்சில் இருந்து கீழே இறங்கு வதற்கு அவதிப்படுகின்றனர். அவர்கள் ரோட்டில் நடந்து செல்லும் பொழுது வாகனங்களில் செல்லும் சிலர் வேகமாக செல்வதால் சேறும் சகதியும் கலந்த தண்ணீர் சீருடைகளை நனைத்து விடும் அபாயம் உள்ளது.எனவே, நெடுஞ்சாலை துறையினர் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பஸ் ஸ்டாப் அருகில் உள்ள குழியை மண் கொட்டி நிரப்ப முன்வரவேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X