பஸ் ஸ்டாண்டில் நுழையாத தொலைதுார பஸ்கள்

Added : நவ 16, 2021
Share
Advertisement
பல்லடம்: பல்லடம் வட்டாரத்தில், திருச்சி, மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். அரசு விடுமுறை, பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில், தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு, பல்லடம், வழித்தடமாக உள்ளது. தொலைதுார பஸ்கள் பல்லடம் வழியாக வரும்போது,

பல்லடம்: பல்லடம் வட்டாரத்தில், திருச்சி, மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். அரசு விடுமுறை, பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில், தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு, பல்லடம், வழித்தடமாக உள்ளது. தொலைதுார பஸ்கள் பல்லடம் வழியாக வரும்போது, பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு பஸ்கள் வருவதால், கடை அமைத்துள்ள வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிப்பதுடன், பயணிகள் ஏறுவதும் இறங்குவதும் எளிது.தொலைதுாரம் செல்லும் பெரும்பாலான அரசு பஸ்கள், பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைவதில்லை. பயணிகளை ரோட்டிலேயே ஏற்றி இறக்கி செல்கின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் இந்த விதிமுறை பின்பற்றப்படுவது கிடையாது.இதனால், வியாபாரிகள் பாதிக்கப்படுவதுடன், என்.எச்., ரோட்டில் காத்திருக்கும் பயணிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது. எனவே, அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்வதை போக்குவரத்து கழக அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X