திருப்பூர்: எம்.பி., சுப்பராயன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:தமிழகத்தில் நுால் விலை அபரிமிதமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. பனியன், ஜவுளி உற்பத்தி தொழில் துறை நிலைகுலைந்துள்ளது.நாடு முழுவதும் உள்ள தேசிய ஜவுளிக்கழக(என்.டி.சி.,) நுாற்பாலைகளில், பனியன் மற்றும் விசைத்தறி, ஜவுளித்துறைக்கு தேவையான நுால் தயாரிக்கப்படவேண்டும். அரசு, தரமான நுாலை, நியாயமான விலைக்கு, ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு விற்க வேண்டும்.இதன்மூலம், நுால் விலை சீராகி, பனியன், ஜவுளி உற்பத்தி தொழில் துறை பாதுகாக்கப்படும். என்.டி.சி., நுாற்பாலை தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்படும்.நுாற்பாலைகளின் பருத்தி - பஞ்சு தேவை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, பருத்தி விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும்; விவசாயிகளுக்கு மானியம் வழங்கவேண்டும்.பருத்தி விவசாயம் அதிகரித்தால், தமிழக ஜவுளித்துறையின் பஞ்சு தேவை பூர்த்தியாகிவிடும். தமிழகத்தில் உள்ள 7 என்.டி.சி., நுாற்பாலைகளையும், மாநில அரசே ஏற்று, பனியன், ஜவுளி தொழிலுக்கு தேவையான தரமான நுால் உற்பத்தி செய்ய வேண்டும்; இதுகுறித்து மத்திய அரசுடன், மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். போர்க்கால அடிப்படையில் செயல்பட்டால் மட்டுமே, ஜவுளி தொழிலை காப்பாற்ற முடியும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE