தடுப்பூசி தடுத்தது; தொற்று தணிந்தது ஒருநாள் பாதிப்பு| Dinamalar

துளிகள் செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி தடுத்தது; தொற்று தணிந்தது ஒருநாள் பாதிப்பு

Added : நவ 16, 2021
Share
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், 179 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பு, 50க்கும் கீழ் பதிவாகியுள்ளது. நேற்று, 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தொற்று பாதிப்புக்கு ஆளானவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குறிப்பாக, இந்த மாத துவக்கம் முதல், தொற்று பாதிப்பு, 60 முதல், 70 ஆக பதிவாகி வந்தது.கடந்த ஒரு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், 179 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பு, 50க்கும் கீழ் பதிவாகியுள்ளது.
நேற்று, 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தொற்று பாதிப்புக்கு ஆளானவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குறிப்பாக, இந்த மாத துவக்கம் முதல், தொற்று பாதிப்பு, 60 முதல், 70 ஆக பதிவாகி வந்தது.கடந்த ஒரு வாரமாக, 60க்கும் கீழ் ஒரு நாள் தொற்று பாதிப்பு உறுதியாகிவந்த நிலையில், நேற்று, 50க்கும் கீழ் குறைந்து, 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தாண்டு திருப்பூர் மாவட்டத்தில் ஏப்ரல், மே மாத இறுதியில் தொற்று வேகமெடுக்க துவங்கியது. ஒரு நாள் பாதிப்பு, 2 ஆயிரத்தை எட்டி அதிர்ச்சி அளித்தது.இருப்பினும், ஆகஸ்ட் மாதத்துக்கு பின் குறைய துவங்கிய தொற்று செப்., - அக்., மாதங்களில், 100 க்கும் குறைவாகவே பதிவாகி வந்தது. நேற்று கடந்த 179 நாட்களில் இல்லாத வகையில் ஒரு நாள் தொற்று பாதிப்பு, 50க்கும் கீழ் வந்துள்ளது. இதுவரை மாவட்டத்தில், 96 ஆயிரத்து, 318 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.நேற்று, 61 பேர் சிகிச்சை முடிந்து நலம் பெற்று வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து இதுவரை, 94,708 பேர் கொரோனாவில் இருந்து நலம் பெற்றுள்ளனர்.இம்மாத துவக்கத்தில், 750 ஆக இருந்த தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நேற்று, 623 ஆக குறைந்திருந்தது. நேற்று தொற்றுக்கு ஒருவர் பலியானார். இதுவரை மாவட்டத்தில், 987 பேர் தொற்று பாதித்து இறந்துள்ளனர்.இந்த மாத துவக்கம் முதல், தொற்று பாதிப்பு,60 முதல், 70 ஆக பதிவாகி வந்தது.கடந்த ஒரு வாரமாக, 60க்கும் கீழ் ஒரு நாள் தொற்று பாதிப்பு உறுதியாகிவந்த நிலையில்,நேற்று, 50க்கும் கீழ் குறைந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X