தமிழ்நாடு

செயற்குழு தீர்மானங்கள் பொதுக்குழுவில் ரத்து: ஏற்றுமதியாளர் சங்கத்தில் பரபரப்பு!

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்: ''ஆண்டுச்சந்தா செலுத்தாத உறுப்பினர்களின் ஓட்டுரிமையை ரத்து செய்வது; ஒருவர் மூன்று முறை (ஒருமுறை என்பது மூன்று ஆண்டுகள்) நிர்வாக பதவி வகிக்கலாம்'' என்று, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பொதுக்குழுவில் நேற்று ரத்து செய்யப்பட்டது.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க 31வது மகாசபை கூட்டம், முதலிபாளையம் நிப்ட்-டீ
செயற்குழு தீர்மானங்கள் பொதுக்குழுவில் ரத்து: ஏற்றுமதியாளர் சங்கத்தில் பரபரப்பு!

திருப்பூர்: ''ஆண்டுச்சந்தா செலுத்தாத உறுப்பினர்களின் ஓட்டுரிமையை ரத்து செய்வது; ஒருவர் மூன்று முறை (ஒருமுறை என்பது மூன்று ஆண்டுகள்) நிர்வாக பதவி வகிக்கலாம்'' என்று, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பொதுக்குழுவில் நேற்று ரத்து செய்யப்பட்டது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க 31வது மகாசபை கூட்டம், முதலிபாளையம் நிப்ட்-டீ ஆடைவடிவமைப்பு கல்லுாரியில் நேற்று மாலை நடந்தது. சங்க தலைவர் ராஜாசண்முகம் தலைமை வகித்தார்.'ஆண்டுச்சந்தா செலுத்தாத உறுப்பினர்களின் ஓட்டுரிமையை ரத்து செய்வது; ஒருவர் மூன்று முறை (ஒருமுறை என்பது மூன்று ஆண்டுகள்) நிர்வாக பதவி வகிக்கலாம்' என, சங்க 'பைலா'வில் திருத்தம் கொண்டுவர செயற்குழு முடிவு செய்திருந்தது.இதற்கு, சங்க உறுப்பினர்கள் பலரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.

நேற்றைய பொதுக்குழுவில், செயற்குழுவின் இரு தீர்மானங்களையும் நிறைவேற்றுவதற்காக, உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.'தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்' என்றும்; 'நிறைவேற்றக்கூடாது' என்றும் இருவேறு கருத்துகளை தெரிவித்து, நிர்வாகிகளும், உறுப்பினர்களும் காரசாரமாக வாதிட்டனர்.

சங்க கவுரவ தலைவர் சக்திவேல், 'துவக்க காலம் முதலே சங்க வளர்ச்சிக்காக ஏராளமானோர் பாடுபட்டுள்ளனர். ஆண்டுச்சந்தா செலுத்தாதோருக்கு ஓட்டுரிமை பறிப்பது ஜனநாயகம் ஆகாது. செயற்குழுவில் எடுக்கப்பட்ட இரு தீர்மானங்களையும் வாபஸ் பெறவேண்டும்; எதிர்காலத்திலும் இத்தகைய மாற்றங்களை கொண்டுவர முயற்சிக்க கூடாது', என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நடந்த ஓட்டெடுப்பில், பெரும்பான்மை உறுப்பினர்கள், தங்கள் கைகளை உயர்த்தி, செயற்குழு முடிவுகளை நிறைவேற்றக்கூடாது என்றனர். இதனால், இரு தீர்மானங்களும் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அனைவரும் ஒன்றிணைந்து, தொழில் வளர்ச்சிக்கு பாடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
சங்க துணை தலைவர் பழனிசாமி, வேலுசாமி. இணை செயலாளர்கள் சோமசுந்தரம், செந்தில்குமார். விஜயகுமார். பொருளாளர் மோகன் உட்பட, மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் என, மொத்தம் 556 பேர் பங்கேற்றனர்.ஓட்டெடுப்பில், பெரும்பான்மை உறுப்பினர்கள், தங்கள் கைகளை உயர்த்தி, செயற்குழு முடிவுகளை நிறைவேற்றக்கூடாது என்றனர். இதனால், இரு தீர்மானங்களும் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அனைவரும் ஒன்றிணைந்து, தொழில் வளர்ச்சிக்கு பாடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayaraman - சென்னை,இந்தியா
16-நவ-202107:48:53 IST Report Abuse
Jayaraman சந்தா செலுத்ததுவது முக்கிய கடமை. அதை செய்யாதவர்களுக்கு ஓட்டுரிமை அநியாயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X