திருப்பூர்: திருப்பூரில் மழை சற்று குறைந்த நிலையில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கட்டுமானப் பணிகள் மீண்டும் வேகம் எடுக்கத் துவங்கியது.வட கிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், திருப்பூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் கட்டுமானப் பணி பெருமளவு பாதிக்கப்பட்டது. இதில் மாநகராட்சி சார்பில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள் தொடர் மழை காரணமாக இடைவெளி விடப்பட்டது. மேலும், தீபாவளி விடுமுறை காரணமாகவும் பணிகள் பெரும்பாலும் மேற்கொள்ளப்படவில்லை.தற்போது திருப்பூர் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்யவில்லை.இதையடுத்து தற்போது ஸ்மார்ட் சிட்டிதிட்டப் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. திருப்பூர் நொய்யல் ஆற்றின் கரையை மேம்படுத்தி, பொழுது போக்கு அம்சங்கள் அமைக்கும் பணி திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது.அவ்வகையில் அணைக்காடு- கருமாரம்பாளையம் இடையே நொய்யல் ஆற்றங்கரையில் கான்கிரீட் சாய்தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE