செய்தி செய்தி

தமிழ்நாடு

பதவி உயர்வு கலந்தாய்வு ஆசிரியர்கள் வலியுறுத்தல்

Added : நவ 16, 2021
Share
Advertisement
திருப்பூர்: உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மூத்த ஆசிரியர்கள் கூடுதல் பொறுப்பாக இதை கவனிக்கும் போது கற்பித்தல் சார்ந்த பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.தற்போது, இரு லட்சம் மாணவர்கள் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்திருப்பதால் கூடுதல் ஆசிரியர் தேவை உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடம் வழங்கப்படுதலும்,

திருப்பூர்: உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மூத்த ஆசிரியர்கள் கூடுதல் பொறுப்பாக இதை கவனிக்கும் போது கற்பித்தல் சார்ந்த பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.தற்போது, இரு லட்சம் மாணவர்கள் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்திருப்பதால் கூடுதல் ஆசிரியர் தேவை உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடம் வழங்கப்படுதலும், நிரப்பப்படுதலும் அவசியமாகியுள்ளது. பதவி உயர்வு என்பது ஆசிரியர்களின் பணிக்காலத்தில் இரண்டு அல்லது மூன்று முறைகளுக்கு மேல் கிடைப்பதில்லை. பதவி உயர்வு இல்லாமலேயே பலர் ஓய்வு பெற கூடிய சூழ்நிலையும் உள்ளது.இதற்கிடையில், 'இவ்வாண்டு, கலந்தாய்வு இல்லை' என்ற தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இதனால் ஆசிரியர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர். இதுகுறித்த தெளிவை கல்வித்துறை அரசாணையாக வெளியிட வேண்டும்' என தேசிய ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X