தமிழ்நாடு

உயிர்களை மீட்க துணிந்த நிஜ 'ஹீரோ'

Added : நவ 16, 2021
Share
Advertisement
திருப்பூர்: சாய ஆலை கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி மயங்கியவர்களை மீட்க துணிச்சலுடன் செயல்பட்ட தீயணைப்பு வீரரை, பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.திருப்பூர், பல்லடம் ரோடு, வித்யாலயா, கொத்துக்காடு பகுதியில் உள்ள ஒரு சாய ஆலையில், நேற்றுமுன்தினம் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது ராமகிருஷ்ணன் என்பவரை விஷ வாயு தாக்கியது.அவரை காப்பாற்ற சென்ற, நாகராஜ்,

திருப்பூர்: சாய ஆலை கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி மயங்கியவர்களை மீட்க துணிச்சலுடன் செயல்பட்ட தீயணைப்பு வீரரை, பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.திருப்பூர், பல்லடம் ரோடு, வித்யாலயா, கொத்துக்காடு பகுதியில் உள்ள ஒரு சாய ஆலையில், நேற்றுமுன்தினம் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது ராமகிருஷ்ணன் என்பவரை விஷ வாயு தாக்கியது.அவரை காப்பாற்ற சென்ற, நாகராஜ், வடிவேல், சாய ஆலை மேலாளர் தினேஷ் பாண்டி, எலக்ட்ரீசியன் ராஜேந்திரன் ஆகியோர் மயங்கினர். ராமகிருஷ்ணன் மட்டும், மீ ண்டு வெளியே வந்தார்.பல்லடம் ரோட்டில் இருந்து சாய ஆலைக்கு அரை கி,மீ., துாரம் இருந்ததால், அவர்களை காப்பாற்ற உடனடியாக ஆட்கள் வரவில்லை. வெளியே நின்றிருந்த பெண்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தட்டு தடுமாறினர். உறவினர்கள் மூலமாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.தகவலறிந்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு வாகனம் விரைந்து சென்றது.
தொட்டிக்குள் உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை காப்பாற்ற தீயணைப்பு வீரர் பாண்டீஸ்வரன் உள்ளே இறங்கினர்.விஷவாயு தாக்கம் இருந்ததால், அவரால் தொடர்ந்து இறங்க முடியவில்லை. உடனே, தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. மீண்டும் முக கவசம் உள்ளிட்டவற்றை அணிந்துகொண்டு கயிறை கட்டி கொண்டு பாண்டீஸ்வரன் உள்ளே இறங்கினார்.நாகராஜ், ராஜேந்திரன் ஆகியோரை மயங்கிய நிலையில் மீட்டார். மற்ற, இருவர் சடலமாக மீ ட்கப்பட்டார்.தனி ஒருவராக உயிரை காப்பாற்ற வேண்டிய முனைப்பில், தன் உயிரை துச்சமாக நினைத்து, தொட்டிக்குள் இறங்கி காப்பாற்றிய தீயணைப்பு வீரர் பாண்டீஸ்வரனை, மக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X