பாக்., ராணுவ தளபதியுடன் மோதல்; பறிபோகிறது இம்ரான்கானின் பிரதமர் பதவி

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
இஸ்லாமாபாத் : ஐ.எஸ்.ஐ. எனப்படும் உளவு அமைப்பின் தலைவர் நியமனத்தில் ராணுவத் தளபதியுடன் ஏற்பட்ட மோதல் தொடர்வதால் பாக். பிரதமர் இம்ரான் கான் தன் பதவியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பாக்.கில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தாலும் ராணுவத்தின் கையே எப்போதும் ஓங்கியிருக்கும். ராணுவத்துக்கு மிகப் பெரிய அளவில் உதவுவது ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு. அதிருப்திஅந்த அமைப்பின் புதிய
Pakistan, Imran Khan, Imran, Pakistan PM

இஸ்லாமாபாத் : ஐ.எஸ்.ஐ. எனப்படும் உளவு அமைப்பின் தலைவர் நியமனத்தில் ராணுவத் தளபதியுடன் ஏற்பட்ட மோதல் தொடர்வதால் பாக். பிரதமர் இம்ரான் கான் தன் பதவியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாக்.கில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தாலும் ராணுவத்தின் கையே எப்போதும் ஓங்கியிருக்கும். ராணுவத்துக்கு மிகப் பெரிய அளவில் உதவுவது ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு. அதிருப்திஅந்த அமைப்பின் புதிய தலைவராக தன் ஆதரவாளரான நதீம் அஞ்சுமை நியமிக்க ராணுவத் தளபதி ஜெனரல் குமர் ஜாவத் பஜ்வா வலியுறுத்தினார்.


latest tamil news



ஆனால் தற்போதுள்ள பயஸ் ஹமீது தொடர்வதற்கு பிரதமர் இம்ரான் கான் விருப்பம் தெரிவித்திருந்தார். இறுதியில் நதீம் அஞ்சுமை நியமிக்க பிரதமர் ஒப்புதல் அளித்தார். அவர் நவ., 20ம் தேதி பதவியேற்க உள்ளார்.நவ., 20ம் தேதிக்குள் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும்படி இம்ரான் கானுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

அவ்வாறு அவர் விலகாவிட்டால் அவரது கட்சிக்கு அளித்து வரும் ஆதரவை முதாஹிடா குவாமி அமைப்பு மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ஆகியவை விலக்கி கொள்ளும் என மிரட்டப்பட்டுள்ளது. இதனால் நவ., 20ம் தேதி இம்ரான் கான் பதவியை இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. மேலும் தெஹ்ரிக் இ லப்பைக் பாகிஸ்தான் என்ற அமைப்பு கடந்த சில மாதங்களாக போராட்டங்களில் ஈடுபட்டது.

அதனால் பல இடங்களில் வன்முறையும் வெடித்தது. அந்த அமைப்பின் கோரிக்கையை ஏற்று அதன் தலைவர் சாத் ரிஸ்வி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நடவடிக்கைகள் ராணுவத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.முடிவுதற்போது ஐ.எஸ்.ஐ. தலைவர் நியமனத்தில் நேரடியாக மோதியுள்ளதால் இம்ரான் கானை பதவியில் இருந்து துாக்க ராணுவத் தளபதி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இம்ரான் கட்சியைச் சேர்ந்த பர்வீஸ் காதக் அல்லது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷபாஸ் நவாஸ் அடுத்த பிரதமராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vijay - coimbatore,இந்தியா
17-நவ-202116:43:26 IST Report Abuse
vijay //...இங்க கொஞ்ச நாளாகும்...// ஹிந்துக்களுக்கு எதிரான நீ அந்த பெயரை ஒளிந்திருக்கிறாய் என்று முன்னரே தெரியும். எத்தனை வருஷம் ஆனாலும் "கான்-கிரேஸ்" இங்கே வராது.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
16-நவ-202119:29:09 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN "மோதல் தொடர்வதால் பாக். பிரதமர் இம்ரான் கான் தன் பதவியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது." உசுரு மிஞ்சுதேன்னு சந்தோசப்படாமே ?
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் இங்க கொஞ்ச நாளாகும்
Rate this:
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
16-நவ-202119:27:55 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஉன்னைப்போன்ற முகம் காட்டா தமுல்-லாக்கள் இந்தியாவில் எதிர்பார்ப்பது அதுவே...
Rate this:
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
16-நவ-202122:32:44 IST Report Abuse
Davamani Arumuga Gounderதிருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் என்ற பெயரில் உலவும் மூர்க்கனே..-..ஆம்.. இங்க கொஞ்ச நாளாகும் .. கொஞ்ச நான் .. சுமார் 20 வருடங்கள் ஆகும்.....
Rate this:
Milirvan - AKL,நியூ சிலாந்து
17-நவ-202100:24:47 IST Report Abuse
Milirvan? புதுசா, ஆனா சரியாத்தான் இருக்கு.. ஹீஈ,,ஹீ.ஈ...ஹி.....
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்ஓய்வுபெற்ற ராணுவ தளபதி டில்லி மந்திரி ஆனது மெய்யா பொய்யா...
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்உனது ஊர் பேர் மறைத்தது? தான் திருடி பிறரை நம்பான் என்பார்கள் உன்பேர் உண்மைதானா என்று யாரும் கேட்கமாட்டார்களோ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X