துளிகள் செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் தயார் சரி பார்க்கும் பணி தீவிரம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.விரைவில் நடக்கவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கின்றன. கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் 703 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட

கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.விரைவில் நடக்கவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கின்றன. கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் 703 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த 703 வார்டுகளுக்கும் தனித்தனியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதை நவ.,1ல் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டு, சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது.தேர்தல் ஆணைய உத்தரவுபடி நவ.,25ல் அரசியல் கட்சியினருக்கு வாக்காளர் பட்டியல் வழங்கப்பட வேண்டும். அதற்கு முன் பட்டியலை அச்சிட்டு தயார் செய்வதற்கான முனைப்பில், தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X