செய்தி செய்தி

தமிழ்நாடு

நீண்ட இழைப்பருத்தி உற்பத்திக்கு உதவணும்: சைமா விதை ஆராய்ச்சி நிறுவனம் வேண்டுகோள்

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை: 'உலகின் சிறந்த சுவின் பருத்திக்கு இணையாக, புதிய நீண்ட இழைப் பருத்தி ரகத்தை சைமா உருவாக்கியுள்ளது. இந்த பருத்தி ரகத்தை பயிரிட விவசாயிகளுக்கு மானியம் வழங்கி அரசு உதவ வேண்டும்' என, சைமா பருத்தி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ரவிச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சைமா பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் துணைத்தலைவர்



கோவை: 'உலகின் சிறந்த சுவின் பருத்திக்கு இணையாக, புதிய நீண்ட இழைப் பருத்தி ரகத்தை சைமா உருவாக்கியுள்ளது.
இந்த பருத்தி ரகத்தை பயிரிட விவசாயிகளுக்கு மானியம் வழங்கி அரசு உதவ வேண்டும்' என, சைமா பருத்தி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ரவிச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சைமா பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் துணைத்தலைவர் வெங்கட் ராமச்சந்திரன், செயலாளர் செல்வராஜ், தலைமை பருத்தி ஆராய்ச்சியாளர் ஆஷா ராணி ஆகியோர், தமிழக ஜவுளித்துறை அமைச்சர் காந்தி மற்றும் மூத்த அமைச்சர்களை சந்தித்து, தமிழகத்தில் பருத்தி உற்பத்தியை ஆண்டிற்கு 30 லட்சம் பேல்களாக அதிகரிக்க கோரி திட்டங்களை வழங்கினர்.இது குறித்து, ரவிச்சந்திரன் கூறியதாவது:தமிழகத்தில் பருத்தி உற்பத்தி ஆண்டுக்கு 5 லட்சம் ஆண்டுகளாக மட்டுமே இருந்து வருகிறது. இங்குள்ள மில்களின் தேவையோ 120 லட்சம் பேல்கள். மிக நீண்ட இழை பருத்தி உற்பத்தியை அதிகரிக்கவும், பருத்தியை மாசில்லாமல் பறிக்க சைமா இயந்திரத்தை பயன்படுத்தவும் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சைமா பருத்தி பறிக்கும் இயந்திரத்திற்கு மத்திய அரசு 40 சதவீதம் மானியம் அளித்து உள்ளது. தமிழக அரசு 80 சதவீதம் மானியம் வழங்கினால், விவசாயிகள் எளிதாக 10 சதவீதம் செலுத்தி வாங்க முடியும்.உலகின் தலைசிறந்த சுவின் பருத்திக்கு பதிலாக, தற்போது சைமா சங்கம் புதிய நீண்ட இழைப் பருத்தி விதையை உருவாக்கியுள்ளது. இதன் உற்பத்தி காலம் 210 நாட்களில் இருந்து 180 நாட்கள் ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேருக்கு 25 முதல் 28 குவிண்டால் மகசூல் தரும் திறன் கொண்டது.150 மெட்ரிக் டன் சான்றளிக்கப்பட்ட விதைகள், உற்பத்தி கள அளவிலான செயல்விளக்கம், பண்ணை கள பள்ளிகள், பருத்தி பிரிக்கும் இயந்திரத்துக்கு 90 சதவீதம் மானியம் மற்றும் நீண்ட இழைப் பருத்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், குவிண்டாலுக்கு 500 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க, அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X