வட்டி பணம் கேட்டு இளைஞர் கடத்தல்

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை: வட்டி பணம் தராததால் இளைஞர் கடத்தப்பட்ட விவகாரத்தில், தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.ரத்தினபுரி சம்பத் வீதியை சேர்ந்த சண்முகம் மனைவி சிவகாமி,52. இவர் கோவை ரத்தினபுரி போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:என் மகன் கோபிநாத்,30 கடந்த சில ஆண்டுகளுக்கு முன், திருவண்ணாமலையை சேர்ந்த பிரகாஷ்,31, சரவணன்,24 ஆகியோரிடம் வட்டிக்கு ரூ.2 லட்சம் கடன் வாங்கி இருந்தார். 1

கோவை: வட்டி பணம் தராததால் இளைஞர் கடத்தப்பட்ட விவகாரத்தில், தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.ரத்தினபுரி சம்பத் வீதியை சேர்ந்த சண்முகம் மனைவி சிவகாமி,52. இவர் கோவை ரத்தினபுரி போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:என் மகன் கோபிநாத்,30 கடந்த சில ஆண்டுகளுக்கு முன், திருவண்ணாமலையை சேர்ந்த பிரகாஷ்,31, சரவணன்,24 ஆகியோரிடம் வட்டிக்கு ரூ.2 லட்சம் கடன் வாங்கி இருந்தார். 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் திருப்பி செலுத்தி விட்டார். ஆனால், அது ரூ.2 லட்சத்துக்கான வட்டி மட்டுமே; எனவே, ரூ.2 லட்சத்தை தரும்படி தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தனர்.இந்நிலையில், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பிரகாஷ் மற்றும் சரவணன், மகனை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்று விட்டனர். மகனை மீட்டு, கடத்தி சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.புகாரின் பேரில், ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X