தமிழ்நாடு

பாலியல் புகார் தெரிவிக்கும் எண் கலெக்டரிடம் மாணவர்கள் கேள்வி

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை: பாலியல் ரீதியான புகார்களை அளிக்க தமிழக அரசு வழங்கிய தொலைபேசி எண் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என, கல்லூரி மாணவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.கோவையை சேர்ந்த பிளஸ் 2 மாணவி பாலியல் துன்புறுத்தல் காரணமாக, தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை கண்டித்து, பல்வேறு கட்சியினர் மற்றும் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு

கோவை: பாலியல் ரீதியான புகார்களை அளிக்க தமிழக அரசு வழங்கிய தொலைபேசி எண் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என, கல்லூரி மாணவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.கோவையை சேர்ந்த பிளஸ் 2 மாணவி பாலியல் துன்புறுத்தல் காரணமாக, தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை கண்டித்து, பல்வேறு கட்சியினர் மற்றும் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, கோவையை சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள், 50க்கும் மேற்பட்டோர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.அவர்கள் கூறுகையில், 'மாணவிகள் மீது பாலியல் தொல்லை நடைபெற்று வருவது அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்து சிறுமிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் 6 மாதம் முதல் 1 வருடம் வரை சிறையில் அடைக்கப்பட்டு மீண்டும் விடுவிக்கப்படுகின்றனர். 'பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளானவர்கள் புகார் அளிக்க, தமிழக அரசு தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளதாக தெரிகிறது. அந்த எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X