செய்தி செய்தி

தமிழ்நாடு

கோவை வந்த ஆப்பிரிக்க கழுகு!

Added : நவ 16, 2021
Share
Advertisement
போத்தனூர்: வெள்ளலூரில், 90 ஏக்கர் பரப்பில் குளம் உள்ளது. தற்போது நீர் நிரம்பியுள்ளதால், பறவைகள் அதிகளவு வருகின்றன. கரைப்பகுதியிலுள்ள அடர் வனத்தில் பலவித பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கின்றன. இவற்றை ஆய்வாளர்கள் கண்டறிந்து வகைப்படுத்தி வருகின்றனர்.அவ்வகையில் கொங்கு நாடு கலை, அறிவியல் கல்லூரியில், விலங்கியல் துறை, உதவி பேராசிரியராக பணிபுரியும் வெங்கிடாச்சலம்,

போத்தனூர்: வெள்ளலூரில், 90 ஏக்கர் பரப்பில் குளம் உள்ளது. தற்போது நீர் நிரம்பியுள்ளதால், பறவைகள் அதிகளவு வருகின்றன. கரைப்பகுதியிலுள்ள அடர் வனத்தில் பலவித பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கின்றன. இவற்றை ஆய்வாளர்கள் கண்டறிந்து வகைப்படுத்தி வருகின்றனர்.அவ்வகையில் கொங்கு நாடு கலை, அறிவியல் கல்லூரியில், விலங்கியல் துறை, உதவி பேராசிரியராக பணிபுரியும் வெங்கிடாச்சலம், இத்துறையில் முதுகலை முதலாமாண்டு பயிலும் மாணவர்கள் சூர்யபிரகாசன், விஜயகுமார், இளையபாரதி ஆகியோருடன், கடந்த இரு மாதங்களாக வெள்ளலுார் குளத்திற்கு வரும் பறவைகளை கண்டறிந்து வருகிறார்.இதில் 'ஈஸ்டர்ன் இம்பீரியல்' எனும் அழிந்து வரும் கழுகு குடும்பத்தை கண்டனர். நேற்று காலை, 9:00 முதல் மாலை, 3:00 மணி வரை கண்காணித்தனர்.வெங்கிடாச்சலம் கூறுகையில், "ஆப்பிரிக்க கண்டத்தில் இனப்பெருக்கம் செய்யும் இக்கழுகு, குளிர்காலத்தில் வட இந்தியாவுக்கு வரும். தற்போது முதல்முறையாக தமிழகத்துக்கு வந்துள்ளது. இங்கு, 10க்கும் மேற்பட்ட ஒரு குடும்பமே உள்ளது. சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் போன்றவற்றால், இவை இங்கு வந்திருக்கலாம். இவ்வினம் அழிந்து வரும் வகையை சேர்ந்தது," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X