அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: வாழ்த்து கூற தகுதி வேண்டும்!

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (73)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எஸ்.ஆர்.ரத்தினம், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, ஹிந்து பண்டிகைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற கருத்து அதிகமாக எழுப்பப்படுகிறது.முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லாததை, சமூகவலைதளங்களில் பலரும்உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எஸ்.ஆர்.ரத்தினம், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, ஹிந்து பண்டிகைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற கருத்து அதிகமாக எழுப்பப்படுகிறது.latest tamil news
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லாததை, சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். அவர் வாழ்த்து சொல்லவில்லை என்றால், பண்டிகை முழுமை அடையாது என நினைப்பது அறியாமை. நம் பாரம்பரிய பண்டிகைகள் எல்லாம், அரசியலை கடந்தவை; அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவை. நம் ஹிந்து பண்டிகைகள், வெறும் சடங்குகள் அல்ல;

அவற்றில் விஞ்ஞானமும், மருத்துவமும், உளவியலும் பொதிந்து இருக்கின்றன. கொண்டாடுவோருக்கு மனநிறைவையும், எதிர்காலத்தை திட்டமிடவும், சவால்களை எதிர்கொள்ளவும், தேவையான மன உறுதியையும், செயலில் புதிய உத்வேகத்தையும் ஊட்டுபவை ஆகும். நம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வோருக்கு, சில குறைந்தப்பட்ச தகுதிகள் தேவை.


latest tamil news
ஹிந்து தர்மத்தை புரிந்து கொள்ளும் அறிவு, நம் கலாசாரத்தின் மீது நம்பிக்கை, நாகரிகம், மாண்பு இதெல்லாம் இருக்க வேண்டும். அனைத்து மனிதர்களையும் சமமாக நினைக்கும் பங்குவமாவது இருக்க வேண்டும். இது எதுவும் இல்லாதவரிடம், வாழ்த்து பெறுவது நமக்கு அவமானம். தகுதி இல்லாதவரின் வாழ்த்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

வாழ்த்து என்பது இதயத்தில் இருந்து வர வேண்டும்; அதை கட்டாயப்படுத்தி பெற கூடாது. நல்லவர் வாழ்த்தும் போது, புண்ணியம் சேரும். தீயவர் வாழ்த்தும் போது, அது பாவத்தையே தரும். ஹிந்து தர்மத்தை அழிக்க நினைப்போரோடு நட்பு பாராட்டுபவர், ஒன்று அறியாமையில் இருப்பார் அல்லது பணத்திற்காக எதையும் செய்ய துணிந்தவராக இருப்பார்.

ஆட்சியை பிடித்து விட்டாலே, நம் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் தகுதியை ஒருவர் அடைந்து விட்டார் என கூற முடியாது. அறிவுடையோருக்கு ஆண்டியும், அரசனும் ஒன்று தான். ஒரு மனிதனின் தகுதி என்பது, அவரின் குணத்தை பொறுத்ததே தவிர, பதவியை பொருத்தது அல்ல.

Advertisement
வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
16-நவ-202123:49:30 IST Report Abuse
Krishna IDHU PICHAI EDUPPADHU POLA KEVALAM
Rate this:
Cancel
Randy -  ( Posted via: Dinamalar Android App )
16-நவ-202122:55:25 IST Report Abuse
Randy தரமான உருட்டு
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
16-நவ-202121:19:16 IST Report Abuse
jagan நாடார் சர்ச்சுக்குள்ள தலித் போக முடியுமா? போனாலும் பெஞ்சில் உக்கார முடியுமா? அப்புறம் தண்ணி தரையை கழுவிடுவதை நான் பார்த்திருக்கேன். இலங்கையில் பிராமணர் இல்லை ஆனாலும் இங்கேயும் அதே ஜாதி கட்டமைப்பு. குறிப்பிட்ட பிரிவினர் (வெள்ளர் ) தான் எல்லாம். தமிழ் ஜாதி கட்டமைப்பு ப்ராமணனால் வந்தது என்பது சுத்த பேத்தல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X