செய்தி செய்தி

தமிழ்நாடு

'கேரளாவில் அதிக புத்தக வாசிப்பு தமிழகத்திலும் வேணும் நேசிப்பு!'

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை: கோவையில் முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில், 224வது இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடந்தது.மூன்று புதிய கவிதை நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நூல்கள் குறித்து கவிஞர்கள் நந்தினி, சின்னசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.நூலாசிரியர் பூபாலன் பேசுகையில், "தமிழகத்தில் புத்தகம் வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஒரு பதிப்புக்கு, 1000 புத்தகங்கள்

கோவை: கோவையில் முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில், 224வது இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடந்தது.மூன்று புதிய கவிதை நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நூல்கள் குறித்து கவிஞர்கள் நந்தினி, சின்னசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.நூலாசிரியர் பூபாலன் பேசுகையில், "தமிழகத்தில் புத்தகம் வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஒரு பதிப்புக்கு, 1000 புத்தகங்கள் போடுவது வழக்கம். ஆனால் இப்போது, 300 புத்தகங்கள்தான் போடப்படுகின்றன.அதுவே விற்பனை ஆவதில்லை. பக்கத்தில் உள்ள கேரளாவில் ஒரு எழுத்தாளர் புத்தகம் எழுதினால், 50 ஆயிரம் புத்தகங்கள் விற்பனை ஆகின்றன. தமிழகத்திலும் இந்த நிலை வர வேண்டும். மக்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும்போதுதான், இலக்கிய வளர்ச்சி சாத்தியமாகும்," என்றார்.விருப்ப தலைப்பில் நடந்த கவியரங்கில், எட்டு கவிஞர்கள் கவிதை வாசித்தனர்.நாட்டுப்புற இசை கலைஞர்கள், வீரமணி, தஞ்சை தமிழ்வாணன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிநடந்தது. நிகழ்ச்சிக்கு, கவிஞர் ரஞ்சிதம்தலைமை வகித்தார். கவிஞர் தங்கமுருகேசன்வரவேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X