செய்தி செய்தி

தமிழ்நாடு

சாகுபடி செய்பவரின் பெயரையும் அடங்கல் சான்றில் குறிப்பிடணும்

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை: அடங்கல் சான்றிதழில், நிலத்தில் பயிர் சாகுபடி செய்துவரும் நபரின் பெயரையும் குறிப்பிட வேண்டும் என்று, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொது செயலாளர் கந்தசாமி கூறியுள்ளதாவது:வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும்சாகுபடி அடங்கல் சான்றிதழில், பட்டாதாரர் பெயர் மட்டுமேகுறிப்பிடப்படுகிறது.தற்போது வடகிழக்கு பருவமழை

கோவை: அடங்கல் சான்றிதழில், நிலத்தில் பயிர் சாகுபடி செய்துவரும் நபரின் பெயரையும் குறிப்பிட வேண்டும் என்று, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொது செயலாளர் கந்தசாமி கூறியுள்ளதாவது:வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும்சாகுபடி அடங்கல் சான்றிதழில், பட்டாதாரர் பெயர் மட்டுமேகுறிப்பிடப்படுகிறது.தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதாலும், விவசாயிகள் குறிப்பிட்ட தேதிக்குள் பயிர்காப்பீடு செய்ய வேண்டியுள்ளதாலும், பயிர் சாகுபடி செய்து வரும் விவசாயிகள் பயன் பெறுவதற்காகவும், அடங்கல் சான்று வழங்கும் போது பட்டாதாரர் பெயருக்கு கீழே குறிப்பு என எழுதி, சம்மந்தப்பட்ட நிலத்தில் பயிர் சாகுபடி செய்து வரும் நபரின் பெயரையும் குறிப்பிட்டு, அவர் நிலத்தில் பயிர் சாகுபடி செய்து வருகிறார் என்று, கிராமநிர்வாக அலுவலர் கையெப்பமிட்டு வழங்க வேண்டும்.இப்படி பயிர் கடன் வழங்குவதற்கு ஏற்ப, அடங்கல் சான்று வழங்க வேண்டும். இந்நடைமுறையை, விருதுநகர் மாவட்டத்தில் பின்பற்ற அம்மாவட்ட நிர்வாகமும், அந்தந்த தாலுகா தாசில்தார்களும் அறிவுறுத்தியுள்ளனர். அதே நடைமுறையை கோவையிலும் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, கந்தசாமி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X