கோவை வீரர்களுக்கு 39 பதக்கங்கள்| Dinamalar

கோவை வீரர்களுக்கு 39 பதக்கங்கள்

Added : நவ 16, 2021
Share
கோவை: மண்டல அளவிலான 'டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்' போட்டியில், கோவை வீரர்கள், 22 தங்கம் உட்பட 39 பதக்கங்கள் வென்றனர்.முதலாம் ஆண்டு தமிழ்நாடு மேற்கு மண்டல 'டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்' திருப்பூர், ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது. கோவை, சேலம், நீலகிரி, நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து, 400க்கும் மேற்பட்ட

கோவை: மண்டல அளவிலான 'டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்' போட்டியில், கோவை வீரர்கள், 22 தங்கம் உட்பட 39 பதக்கங்கள் வென்றனர்.முதலாம் ஆண்டு தமிழ்நாடு மேற்கு மண்டல 'டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்' திருப்பூர், ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது.
கோவை, சேலம், நீலகிரி, நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து, 400க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.சப் ஜூனியர், கேடட், ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய வயது பிரிவினருக்கு, பல்வேறு எடை பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில், கோவை மாவட்ட அணி சார்பில், 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.22 தங்கம், 10 வெள்ளி, ஏழு வெங்கலம் என மொத்தம், 39 பதக்கங்கள் வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டாமிடம் பிடித்தது.இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்கள், மாநில போட்டிக்கான மேற்கு மண்டல அணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X