ராத்திரி முழுவதும் ஊளை...போகுதே நித்திரை! மாநகராட்சியின் பல பகுதிகளிலும் நாய்கள் தொல்லை

Added : நவ 16, 2021
Share
Advertisement
கழிப்பிடம் அருகே குவியுது குப்பைமாநகராட்சி, 99வது வார்டுக்கு உட்பட்ட, முதலியார் வீதியில், ரேஷன் கடை பின்புறம் உள்ள, பொதுக்கழிப்பிடம் செல்லும் வழியில், குப்பை குவிந்துள்ளது. இப்பகுதியில் துாய்மை பணியாளர்கள் முறையாக பணியை மேற்கொண்டு குப்பையை அப்புறப்படுத்த வேண்டும்.- முத்துகுமார்,முதலியார் வீதி.பயனற்ற மின் கம்பம்மாநகராட்சி, 56வது வார்டுக்கு உட்பட்ட, பீளமேடு, கல்லுாரி



கழிப்பிடம் அருகே குவியுது குப்பைமாநகராட்சி, 99வது வார்டுக்கு உட்பட்ட, முதலியார் வீதியில், ரேஷன் கடை பின்புறம் உள்ள, பொதுக்கழிப்பிடம் செல்லும் வழியில், குப்பை குவிந்துள்ளது. இப்பகுதியில் துாய்மை பணியாளர்கள் முறையாக பணியை மேற்கொண்டு குப்பையை அப்புறப்படுத்த வேண்டும்.- முத்துகுமார்,முதலியார் வீதி.

பயனற்ற மின் கம்பம்மாநகராட்சி, 56வது வார்டுக்கு உட்பட்ட, பீளமேடு, கல்லுாரி நகரில், சாலையோரம் பயனற்று வைக்கப்பட்டுள்ள மின் கம்பத்தை இப்பகுதியில் இருந்து எடுத்து, மின் கம்பம் இல்லாத பகுதியில் அமைக்க வேண்டும்.- கோபிநாத், கல்லுாரி நகர்.

விபத்து அபாயம்ஆவாரம்பாளையம், காமராஜ் நகர் மூன்றாவது வீதியில், சாக்கடை கால்வாய் சிலாப் இன்றி திறந்த நிலையில் உள்ளது. குழந்தைகள், வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் முன், இக்கால்வாய்க்கு சிலாப் அமைக்க வேண்டும்.- யுவராஜ், காமராஜ் நகர்.

நாய் தொல்லைமக்கள் அலறல்மாநகராட்சி பகுதி மட்டுமின்றி, புறநகர் பகுதிகளிலும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. பகலில் சாலையில் சுற்றித்திரிந்து, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் இவை, இரவு நேரங்களில், குடியிருப்பு பகுதிகளில், மக்களை நிம்மதியாக துாங்க விடாமல், சத்தம் போட்டுக்கொண்டே இருப்பதால், மக்கள் நிம்மதியின்றி உள்ளனர். இவற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தினேஷ், குனியமுத்துார்.

விநாயகபுரத்தில் வெளிச்சமில்லைமாநகராட்சி, 30வது வார்டுக்கு உட்பட்ட, சரவணம்பட்டி, பாரதியார் வீதி, விநாயகபுரத்தில் உள்ள, மின் கம்பங்களில், விளக்குகள் கடந்த இரு வாரங்களாக எரிவதில்லை.- செந்தில்குமார், விநாயகபுரம்.

குப்பை தொட்டியை அகற்றணும்கவுண்டம்பாளையம், எஸ்.கே.ஆர். நகர், இரண்டாவது வீதியில், வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில், கழிவுகளை உட்கொள்ள வரும் வீட்டு விலங்குகள், சாலையை ஆக்கிரமித்து நிற்பதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இத்தொட்டியை இப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும்.- கார்த்திகேயன், கவுண்டம்பாளையம்.

துாய்மை பணியாளர்கள் வருவதில்லைமாநகராட்சி, 33வது வார்டுக்கு உட்பட்ட, விளாங்குறிச்சி, காமாட்சி அம்மன் கோவில் வீதிக்கு, துாய்மை பணியாளர்கள் வருவதில்லை. மலைபோல் குவிந்துள்ள குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- தமிழ்செல்வன், காமாட்சி அம்மன் கோவில் வீதி.

பஸ் ஸ்டாப் அருகே குவியுது குப்பைமேட்டுப்பாளையம் ரோடு, பூ மார்க்கெட் பஸ் ஸ்டாப் அருகில், குப்பை தொட்டி இல்லாததால், குப்பை சாலையோரம் குவிக்கப்படுகிறது. காற்றில் பறக்கும் இக்குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- ரமேஷ்குமார், பூ மார்க்கெட்.

குப்பையை தொட்டியில் கொட்டுங்கதொண்டாமுத்துார் ஊராட்சி ஒன்றியம், தீத்திபாளையம் மகளிர் குழு கட்டடம் அருகில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியை யாரும் பயன்படுத்துவதில்லை. இதில் கொட்ட வேண்டிய குப்பையை, இதன் அருகிலேயே, சாலையோரம் வீசி செல்கின்றனர்; தேங்கும் குப்பையால், துர்நாற்றம் வீசுகிறது.- தினேஷ், தீத்திபாளையம்.

தேவையற்ற வேகத்தடைகளைபாலக்காடு ரோடு, குனியமுத்துார் அபர்ணா மருத்துவமனை அருகில், ஞானபுரத்தில் இருந்து, நிர்மல மாதா பள்ளி வரை, தேவையற்ற இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். தேவையற்ற வேகத்தடைகளை அகற்றுவதுடன், குண்டும் குழியுமாக உள்ள இச்சாலையை செப்பனிடுவது அவசியம்.- குமார், குனியமுத்துார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X