அன்னபூர்ணாவின் புதிய உணவகம் துவக்கம்

Added : நவ 16, 2021
Advertisement
கோவை: ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அன்னபூர்ணா ஓட்டலில், புதிய ஐகான் மற்றும் கோவ் உணவகம் துவக்கப்பட்டுள்ளது.தொழிலதிபர் வரதராஜன், ஜி.ஆர்.ஜி., டிரஸ்ட் அறங்காவலர் நந்தினி ரங்கசாமி துவக்கி வைத்தனர். சங்கரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ரமணி, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். பிரிக்கால் தலைவர் விஜய் மோகன், கோவ் சிறப்பு உணவகத்தை துவக்கி வைத்தார். பண்ணாரி அம்மன் குழு தலைவர்

கோவை: ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அன்னபூர்ணா ஓட்டலில், புதிய ஐகான் மற்றும் கோவ் உணவகம் துவக்கப்பட்டுள்ளது.தொழிலதிபர் வரதராஜன், ஜி.ஆர்.ஜி., டிரஸ்ட் அறங்காவலர் நந்தினி ரங்கசாமி துவக்கி வைத்தனர். சங்கரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ரமணி, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். பிரிக்கால் தலைவர் விஜய் மோகன், கோவ் சிறப்பு உணவகத்தை துவக்கி வைத்தார். பண்ணாரி அம்மன் குழு தலைவர் பாலசுப்ரமணியம், ஐகானை துவக்கி வைத்தார்.சக்தி குழும தலைவர் மாணிக்கம், நர்மதா 'ஏசி' அறையை துவக்கி வைத்தார். சுமங்கலி ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் விஸ்வநாதன், இனிப்புகள் பிரிவு முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.அன்னபூர்ணா நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், ''புதுப்பிக்கப்பட்டுள்ள அன்னபூர்ணாவின் ஐகானில், 52 சொகுசு அறைகளும், கோவ்வில் 120 இருக்கைகள் வசதியும், வழக்கமான உணவு பட்டியலின்படி செயல்படும் அன்னபூர்ணா உணவகமும் உள்ளன. ஐகானில் எக்ஸிக்யூட்டிவ் மற்றும் சூட் அறைகள் உள்ளன. இதில், 3 அரங்குகளில் வணிக சந்திப்பு நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் நடத்தும் வசதி உள்ளது,'' என்றார்.அன்னபூர்ணா தலைவர் ராமசாமி, துணை தலைவர் சுந்தர்ராஜன், இணை இயக்குனர் வெங்கடேஷ், செயல் இயக்குனர்கள் ஜெகன் எஸ் தாமோதரசாமி, கார்த்திகேயன், விவேக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X