மாணவியின் கடிதம் தடயவியல் சோதனைக்கு உட்படுத்த முடிவு! போலீசாரின் தொடர் விசாரணை துரிதம் | Dinamalar

தமிழ்நாடு

மாணவியின் கடிதம் தடயவியல் சோதனைக்கு உட்படுத்த முடிவு! போலீசாரின் தொடர் விசாரணை துரிதம்

Added : நவ 16, 2021
Share
கோவை: கோவையில், பாலியல் துன்புறுத்தல் காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்த வழக்கில், மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள உண்மை தன்மையை அறிய, தடயவியல் சோதனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.கோவை, கோட்டைமேட்டை சேர்ந்த, 17 வயது மாணவி, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, மாணவிக்கு பாலியல் தொல்லை



கோவை: கோவையில், பாலியல் துன்புறுத்தல் காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்த வழக்கில், மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள உண்மை தன்மையை அறிய, தடயவியல் சோதனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.கோவை, கோட்டைமேட்டை சேர்ந்த, 17 வயது மாணவி, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், அப்பள்ளியில் இருந்து விலகி,சில மாதங்களுக்கு முன் வேறு பள்ளியில் சேர்ந்தார். இச்சூழலில், மூன்று நாட்களுக்கு முன் மாணவி, அவரது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' பிரிவின் கீழ் மிதுன் சக்ரவர்த்தியை கைது செய்தனர். தொடர்ந்து பள்ளி முதல்வரான கேரளா, கொச்சியை சேர்ந்த மினி ஜாக்சன் (எ) மீரா ஜாக்சனிடம், 46 புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல், போலீசிலும் சொல்லாததால் அவர் மீதும் 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சூழலில், மாணவி எழுதியதாக கூறப்படும் ஒரு சிறிய பேப்பர் ஒன்று இருந்தது. அதில், மிதுன் சக்ரவர்த்தி உட்பட மூவர் குறித்த குறிப்புகள் உள்ளன. இதனுடன், மாணவி கைப்பட எழுதிய ஒரு கடிதமும் உள்ளது. போலீசார் அதை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில், சம்பவம் தொடர்பாக முழு தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், 'கடிதத்தில் உள்ளது மாணவியின் கையெழுத்து தானா என்பதை உறுதி செய்ய, தடயவியல் சோதனைக்குட்படுத்த முடிவு செய்துள்ளோம். மேலும் பேப்பர் குறிப்பில் உள்ள நபர்கள் யார், எதற்காக இந்த பெயர்கள் எழுதப்பட்டுள்ளது, இவர்களுக்கும் மாணவியின் தற்கொலைக்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என்றனர்.வழக்கு பதிவு செய்ய முடிவுபொதுவாக 'போக்சோ' வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர், புகைப்படம் போன்ற தகவல்களை வெளியிடக்கூடாது. ஆனால், கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பினர், மாணவியின் புகைப்படம், பெயர் போன்ற தகவல்களை வெளியிட்டனர். அதேபோன்று 'ஆன்லைன்' உட்பட சில மீடியாக்களும் மாணவியின் பெயர், புகைப்படத்தை வெளியிட்டனர். இதனால், இவர்கள் மீது உரிய சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய, கோவை மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.உரிய விசாரணைக்கு உறுதிகடந்த சில ஆண்டுகளாக, முக்கிய சில சம்பவங்களில் பல்வேறு அமைப்பினர், சங்கங்கள் திடீர் ஆர்ப்பாட்டங்களில் குதிக்கின்றனர். பிரச்னை என்னவென்று விசாரிப்பதற்குள் இவர்கள் கூட்டமாக கூடி 'அழுத்தம்' தருவதால், போலீசார் உண்மை குற்றவாளியை பிடிக்க சிரமம் ஏற்படுகிறது.இதுகுறித்து மூத்த போலீஸ்காரர் ஒருவர் கூறியதாவது:'ஒரு பிரச்னை என்றால் முதலில் அதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்த நேரம் வேண்டும். பிரச்னை நடந்த அன்றே இவர் தான் குற்றவாளி என்று தீர்மானித்து, கூட்டமாக வந்து சிலர் சொன்னால், அதை வைத்து நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. எங்களுக்கு போதுமான ஆதாரம் இருந்து, தேவையான சாட்சிகள் இருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இப்போதெல்லாம் புலன் விசாரணை செய்வதற்கு முன்பே கூட்டமாக வந்துவிடுகின்றனர். இதனால் அனைத்து குற்றவாளிகளையும் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்த முடிவதில்லை. தற்போது பள்ளி மாணவி தற்கொலை வழக்கிலும் உரிய விசாரணை நடத்தப்பட்டு, இதிலுள்ள அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X