தமிழ்நாடு

பல்கலை ஆராய்ச்சி, மதிப்பீட்டு துறையில் குளறுபடி? ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிக்கல்

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை: பாரதியார் பல்கலை ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டு துறையில், பல்வேறு நிர்வாக குளறுபடி நடப்பதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.பாரதியார் பல்கலையில், ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பித்தல், வழிகாட்டி நபர், ஆய்வுக்கட்டுரைகளை மதிப்பீடு செய்யும் புறநிலை தேர்வாளர்கள் உட்பட அனைத்து நடைமுறைகளையும், பல்கலையில் செயல்பட்டு வரும் ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டு துறை



கோவை: பாரதியார் பல்கலை ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டு துறையில், பல்வேறு நிர்வாக குளறுபடி நடப்பதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.பாரதியார் பல்கலையில், ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பித்தல், வழிகாட்டி நபர், ஆய்வுக்கட்டுரைகளை மதிப்பீடு செய்யும் புறநிலை தேர்வாளர்கள் உட்பட அனைத்து நடைமுறைகளையும், பல்கலையில் செயல்பட்டு வரும் ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டு துறை மேற்கொள்கிறது. இத்துறையில் பல்வேறு குளறுபடி நிலவுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.பிஎச்.டி., வழிகாட்டி வீரமணி கூறியதாவது:எனது வழிகாட்டுதலில் பெண் ஒருவர், பிஎச்.டி., மேற்கொண்டுள்ளார். 2019, ஜூன், 26ம் தேதி ஆய்வுச்சுருக்கத்தை சமர்பித்துள்ளார். ஆய்வேட்டை மதிப்பீடு செய்ய, புறநிலை தேர்வாளர்களின் விருப்பத்தை கேட்டு இரு முறை கடிதம் அனுப்பப்பட்டு அதற்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டு விட்டது. ஆனால், பல்கலை சார்பில் மூன்றாம் முறையாக விருப்பம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அப்பெண், 2020, டிச., 29ம் தேதி ஆய்வுக்கட்டுரை சமர்பித்த நிலையில், புறநிலை தேர்வாளர்களுக்கு ஆறு மாதங்கள் கழித்து அது அனுப்பப்பட்டுள்ளது. புறநிலை தேர்வாளர்கள், மதிப்பீட்டு அறிக்கையை அனுப்பிய நிலையில், ஒரு மாதம் கழித்து அவர்களுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர, மதிப்பீட்டு அறிக்கை அனுப்பப்பட்டு, 72 நாட்கள் கடந்த நிலையில், வழிகாட்டியான எனக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.இவையனைத்தும் பல்கலை இணையதளத்தில் உள்ளன. ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டு துறையில் நிலவும் நிர்வாக குளறுபடியை இது வெளிப்படையாக காட்டுகிறது. இது ஒரு உதாரணம் மட்டுமே. இதனால் பல ஆய்வாளர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.பல்கலை துணைவேந்தர் காளிராஜ் கூறுகையில், ''ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டு துறையில் அனைத்து நடைமுறைகளும் முறைப்படி நடக்கின்றன. இதில் எவ்வித குளறுபடியும் இல்லை. இதுகுறித்து நேடிரயாக நான் கண்காணித்து வருகிறேன். புறநிலை தேர்வாளர், பல்கலை நடைமுறைகளின்படி, அறிக்கை அனுப்பவில்லை. அதுகுறித்தே அவருக்கு நினைவூட்டப்பட்டது. தற்போது அவர் அறிக்கையை அளித்துள்ளார். இதையடுத்து உடனடியாக வழிகாட்டிக்கு தகவல் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X