தமிழ்நாடு

பள்ளிகளில் பாதுகாப்பு பெட்டி திட்டம் வரும் 19ம் தேதி துவக்கம்: அமைச்சர்

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை,: ''பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சிறப்பு வழிகாட்டுதல்களுடன் கூடிய பாதுகாப்பு பெட்டி திட்டம், நவ.,19ம் தேதி துவக்கப்பட உள்ளது,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.கோவை காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், கம்ப்யூட்டர் ஆய்வகத்திற்கு, 'எக்ஸ்டிரோ' நிறுவனம் சார்பில், 50 கம்ப்யூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கோவை,: ''பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சிறப்பு வழிகாட்டுதல்களுடன் கூடிய பாதுகாப்பு பெட்டி திட்டம், நவ.,19ம் தேதி துவக்கப்பட உள்ளது,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.கோவை காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், கம்ப்யூட்டர் ஆய்வகத்திற்கு, 'எக்ஸ்டிரோ' நிறுவனம் சார்பில், 50 கம்ப்யூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று ஆய்வகத்தை திறந்து வைத்தார்.தொடர்ந்து அவர் பேசியதாவது:தொழில்நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்., நிதி வாயிலாக, அரசு பள்ளிகளுக்கு உதவும் வகையில் மேம்படுத்தப்பட்ட பிரத்யேக வெளிப்படைத்தன்மை கொண்ட 'போர்டல்' ஒன்று வடிவமைத்து வருகிறோம். விரைவில் இப்போர்டல் துவக்கி வைக்கப்படும்.
அந்தந்த பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் அரசு பள்ளிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க முன்வரவேண்டும்.கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில், சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளது; குற்றம் செய்தவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள்.பள்ளி மாணவர்கள் எந்த பிரச்னையாக இருந்தாலும் தயக்கமின்றி, 14417 என்ற எண்ணுக்கு அழைத்து உதவி கேட்கலாம்.
இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. பள்ளிகளில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு பெட்டி வைக்கும் திட்டம், நவ.,19ம் தேதி துவக்கப்படவுள்ளது. இதுகுறித்து விரிவாக அன்று தெரிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.கலெக்டர் சமீரன், முதன்மை கல்வி அதிகாரி கீதா, பள்ளி தலைமையாசிரியர் முருகேசன், எக்ஸ்டிரோ நிறுவன தலைவர் பாப்பி பாலச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X