செய்தி செய்தி

தமிழ்நாடு

மனைவிக்கு வளைகாப்பு விபத்தில் கணவர் பலி

Added : நவ 16, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: மனைவியின் வளைகாப்பு விழாவை முடித்து விட்டு திரும்பிய கணவர், வாகன விபத்தில் பலியான சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காரமடை அடுத்த மருதுார் கணுவாய்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல், 23. இவரது மனைவி பிரியாவுக்கு, நேற்று, குருந்தமலை அருகே மொக்கை நகரில் வளைகாப்பு நடந்தது. இதில் பங்கேற்ற பின், இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தார். திம்மம்பாளையம்

மேட்டுப்பாளையம்: மனைவியின் வளைகாப்பு விழாவை முடித்து விட்டு திரும்பிய கணவர், வாகன விபத்தில் பலியான சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காரமடை அடுத்த மருதுார் கணுவாய்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல், 23. இவரது மனைவி பிரியாவுக்கு, நேற்று, குருந்தமலை அருகே மொக்கை நகரில் வளைகாப்பு நடந்தது. இதில் பங்கேற்ற பின், இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தார். திம்மம்பாளையம் புதுாரை சேர்ந்த முதியவர் மனோகரன், 65, இவரிடம் 'லிப்ட்' கேட்டு, வாகனத்தில் ஏறியுள்ளார்.குருந்தமலை கோவில் பின்புறம், எதிரே வந்த பிகோ காரும், இரு சக்கர வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது. சக்திவேல் ஹெல்மெட் அணியாததால், தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.மனோகரனுக்கு, இரண்டு காலிலும் முறிவு ஏற்பட்டதால், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரை ஓட்டி வந்த மேட்டுப்பாளையம் அடுத்த பாயப்பனுாரை சேர்ந்த ஜீவானந்தம், 20 தப்பி ஓடிவிட்டார். காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X