தமிழ்நாடு

4 ஆண்டுகளில் 1.85 கோடி மரக்கன்றுகள்: தமிழகம் முழுவதிலும் வளர்க்க திட்டம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஆனைமலை: தமிழகம் முழுவதும் நான்கு ஆண்டுகளில், 1.85கோடி மரக்கன்றுகள் வளர்க்க அரசு திட்டமிட்டுள்ளது.தமிழக அரசு வேளாண் துறை வாயிலாக, 'விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம்' என்ற புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத்திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் வாயிலாக, மாநிலம் முழுவதிலும், மரப்பயிர்களை வளர்த்து விவசாயிகளுக்கு லாபத்தை ஏற்படுத்தவும், சூழலை மேம்படுத்தவும்

ஆனைமலை: தமிழகம் முழுவதும் நான்கு ஆண்டுகளில், 1.85கோடி மரக்கன்றுகள் வளர்க்க அரசு திட்டமிட்டுள்ளது.தமிழக அரசு வேளாண் துறை வாயிலாக, 'விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம்' என்ற புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத்திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் வாயிலாக, மாநிலம் முழுவதிலும், மரப்பயிர்களை வளர்த்து விவசாயிகளுக்கு லாபத்தை ஏற்படுத்தவும், சூழலை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக, 72.42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டு, முதலில் இரண்டு ஆண்டுகளில், 73 லட்சம், அடுத்த கட்டமாக இரண்டு ஆண்டுகளில், 1.12 கோடியும் மரக்கன்றுகள் வளர்க்கப்பட உள்ளன. தேக்கு, சந்தனம், சிகப்பு சந்தனம், வேங்கை, மஞ்சள் கடம்பு, மலை வேம்பு, மகாகனி, கருமருது, பூவரசு உள்ளிட்ட மரப்பயிர்களுக்கான மரக்கன்றுகள் வளர்க்கப்பட உள்ளன.வேம்பு, புங்கை, புளி, மருத மரம், துாபமரம், வில்வம், நெல்லி உள்பட பலவகை மூலிகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.விவசாயிகளுக்கு ஒரு மரக்கன்று, 14 ரூபாய்க்கு மானியத்தில் வழங்கப்பட்டு, மூன்று ஆண்டு பராமரிப்புக்கு 21 ரூபாய் என,35 ரூபாய் அரசு மானியமாக வழங்குகிறது.
வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின், நாற்றுப்பண்ணைகளில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகள் அருகிலுள்ள வேளாண் அலுவலகங்களில் பதிவு செய்து, மரக்கன்றுகள் பெற்றுக்கொள்ளலாம் என, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X