தமிழ்நாடு

நீலகிரி மாஜி எம்.பி., விவகாரம் அவை தலைவர் பதவி போச்சு

Added : நவ 16, 2021
Share
Advertisement
குன்னுார்: நீலகிரி மாஜி எம்.பி., விவகாரம் தொடர்பான சர்ச்சையில், மாவட்ட அவை தலைவர் பதவியில் இருந்து, அவர் நீக்கப்பட்டார்.நீலகிரி தொகுதி, அ.தி.மு.க., மாஜி எம்.பி., கோபாலகிருஷ்ணன். 56. குன்னுார் முத்தாலம்மன் பேட்டையை சேர்ந்த இவர், கடந்த தீபாவளி நாளில், உறவினர் கோபி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு, எம்.பி.,க்கும், உறவினர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. கோபியின்

குன்னுார்: நீலகிரி மாஜி எம்.பி., விவகாரம் தொடர்பான சர்ச்சையில், மாவட்ட அவை தலைவர் பதவியில் இருந்து, அவர் நீக்கப்பட்டார்.நீலகிரி தொகுதி, அ.தி.மு.க., மாஜி எம்.பி., கோபாலகிருஷ்ணன். 56. குன்னுார் முத்தாலம்மன் பேட்டையை சேர்ந்த இவர், கடந்த தீபாவளி நாளில், உறவினர் கோபி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு, எம்.பி.,க்கும், உறவினர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. கோபியின் குடும்பத்தினர், குன்னுார் போலீசில் புகார் கொடுத்தனர்.அப்போது, மாஜி நிர்வாணமாக இருந்த வீடியோவும் போலீசாரிடம் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாஜி எம்.பி., தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது.
இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், தனியார் மருத்துவமனையில், கோபாலகிருஷ்ணன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான சர்ச்சை, அ.தி.மு.க., வட்டாரத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவரை, நீலகிரி மாவட்ட அவை தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்து, கட்சி தலைமை அறிவித்துள்ளது.முன்ஜாமின் மனு 17க்கு ஒத்திவைப்புசம்பவத்தில், மாஜி எம்.பி., மற்றும் கோபியின் மகன் கிஷோர் ஆகியோர், முன்ஜாமின் கோரி, கடந்த, 12ம் தேதி ஊட்டி செஷன்ஸ் கோர்டில் மனுதாக்கல் செய்தனர். அப்போது, 'முன்ஜாமின் தொடர்பாக போலீசார் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும்,'என, நீதிபதி சஞ்சய் பாபா தெரிவித்துள்ளார்.நேற்று, முன்ஜாமின் மனு விசாரணைக்கு வந்த போது, 'இருவருக்கும் முன்ஜாமின் அளிக்க கூடாது,' என, போலீசார் ஆட்சேபம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, நீதிபதி சஞ்சய் பாபா நவ., 17ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X