மலைப் பாதையில் ரயில் சோதனை ஓட்டம்| Dinamalar

தமிழ்நாடு

மலைப் பாதையில் ரயில் சோதனை ஓட்டம்

Added : நவ 16, 2021
Share
குன்னுார்: குன்னுார்- மேட்டுப்பாளையம் இடையே, 23 நாட்களுக்கு பின், நேற்று, மலை ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.குன்னுார் பகுதிகளில் கடந்த மாதம் பெய்த கனமழையில், மேட்டுப்பாளையம்- - குன்னுார் மலை ரயில்பாதையில், ஆடர்லி அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. 23ம் தேதி பாறைகள் விழுந்ததால், மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது.மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், சுற்றுலா பயணியர் பாதுகாப்பு

குன்னுார்: குன்னுார்- மேட்டுப்பாளையம் இடையே, 23 நாட்களுக்கு பின், நேற்று, மலை ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.குன்னுார் பகுதிகளில் கடந்த மாதம் பெய்த கனமழையில், மேட்டுப்பாளையம்- - குன்னுார் மலை ரயில்பாதையில், ஆடர்லி அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. 23ம் தேதி பாறைகள் விழுந்ததால், மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது.மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், சுற்றுலா பயணியர் பாதுகாப்பு நலன் கருதியும், இம்மாதம், 15ம் தேதி வரை, மலை ரயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று இரு பெட்டிகள் மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் மேட்டுப்பாளையம்- - குன்னுார் இடையே, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், 'ரயில் பாதையில் பாலம், குகை உள்ள பகுதிகளில், தண்டவாளங்கள் சரியாக உள்ளதா என்பதை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மழையால், பாதிப்பு இல்லை எனில், விரைவில் மலை ரயில் இயக்கப்படும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X