தமிழ்நாடு

விஷ வாயு கசிவு; பலி 3 ஆக உயர்வு: சாய ஆலைக்கு நோட்டீஸ்

Added : நவ 16, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூரில், சாய ஆலை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது, விஷவாயு தாக்கிய சம்பவத்தில், பலியானோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.திருப்பூர்- பல்லடம் ரோடு வித்யாலயா, கொத்துக்காடு தோட்டத்தில், 'பேன்டோன் டையர்ஸ்' என்ற சாய ஆலை செயல்படுகிறது. ஆலையில் உள்ள ரசாயனங்கள் அடங்கிய கழிவுநீர் தொட்டியை நேற்றுமுன்தினம் சுத்தம் செய்தபோது, தொழிலாளி ராமகிருஷ்ணன், 50, விஷ



திருப்பூர்: திருப்பூரில், சாய ஆலை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது, விஷவாயு தாக்கிய சம்பவத்தில், பலியானோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.திருப்பூர்- பல்லடம் ரோடு வித்யாலயா, கொத்துக்காடு தோட்டத்தில், 'பேன்டோன் டையர்ஸ்' என்ற சாய ஆலை செயல்படுகிறது. ஆலையில் உள்ள ரசாயனங்கள் அடங்கிய கழிவுநீர் தொட்டியை நேற்றுமுன்தினம் சுத்தம் செய்தபோது, தொழிலாளி ராமகிருஷ்ணன், 50, விஷ வாயு தாக்கி அலறினார். இவரை காப்பாற்ற முயன்ற, திருப்பூர் பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த வடிவேல், 32, ஆலை மேலாளர் தினேஷ் பாண்டி, 32 ஆகியோர், விஷ வாயு தாக்கி பலியாயினர். மேலும் தொழிலாளி நாகராஜ், 48, எலக்ட்ரீசியன் ராஜேந்திரன், 55 ஆகியோர் மயங்கினர். ராமகிருஷ்ணன் உயிர் தப்பினார்.திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் நேற்று அதிகாலை இறந்தார். நாகராஜ் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுதொடர்பாக, சாய ஆலை உரிமையாளர் தனலட்சுமி, 48 மீது, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குனர் புகழேந்தி சாய ஆலையில், நேற்று ஆய்வு செய்து, நோட்டீஸ் வழங்கினார். ஆலை மீது கோர்ட்டில் வழக்கு தொடரவும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு பெற்று தரவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X