ஓரினச் சேர்க்கையாளர் நீதிபதியாக நியமனம் ? : உச்சநீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஓரினச் சேர்க்கையாளர் நீதிபதியாக நியமனம் ? : உச்சநீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரை

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (20)
Share
புதுடில்லி:ஓரினச் சேர்க்கையில் ஆர்வமுள்ள மூத்த வழக்கறிஞருக்கு, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிப்பதற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய 'கொலீஜியம்' கடந்த, 2017ல், வழக்கறிஞர், சவ்ரப் கிர்பலை, உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய, பரிந்துரைத்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற
ஓரினச் சேர்க்கையாளர் In a first, SC collegium recommends elevation of openly-gay senior advocate Saurabh Kirpal as Delhi HC judgeநீதிபதியாக நியமனம் ?  : உச்சநீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரை

புதுடில்லி:ஓரினச் சேர்க்கையில் ஆர்வமுள்ள மூத்த வழக்கறிஞருக்கு, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிப்பதற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய 'கொலீஜியம்' கடந்த, 2017ல், வழக்கறிஞர், சவ்ரப் கிர்பலை, உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய, பரிந்துரைத்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூட்டத்தில், சவ்ரப் கிர்பல் நியமனம் குறித்து நான்கு முறை விவாதிக்கப்பட்டது. முடிவு எடுக்கப்படவில்லை.கடந்த, மார்ச், 2ல் நடந்த கூட்டத்தில், மத்திய அரசிடம் கூடுதல் விபரங்களை கேட்க முடிவு செய்யப்பட்டது.


latest tamil news



இந்நிலையில் கடந்த நவ.11-ம் தேதியன்று மீண்டும் கொலீஜியம் கூடியது. இதில் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக சவ்ரப் கிர்பல் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவ்ரப் கிர்பல் நியமிக்கப்பட்டால், உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக முதன்முறையாக ஓரின சேர்க்கையாளர் நியமிக்கப்பட உள்ளார்.


ஓரினச் சேர்க்கையாளரான சவ்ரப் கிர்பல், உச்ச நீதிமன்றத்தில், ஓரினச் சேர்க்கையை கிரிமினல் குற்றமாக்கும் வழக்கை எதிர்த்து வாதாடியுள்ளார். சவ்ரப் கிர்பாலின் துணைவர், ஒரு வெளிநாட்டு பிரஜை என கூறப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X