தமிழ்நாடு

யானை வழித்தடம் அழிப்பு என்.எச்., பணியால் ஆபத்து

Added : நவ 16, 2021
Share
Advertisement
குன்னுார்: குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில், யானை வழித்தடத்தை அழிக்கும் செயலில், தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம், குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதிகளில், தண்ணீர், உணவுக்காக அவ்வப்போது, யானைகள், குறிப்பிட்ட சாலையை கடக்கின்றன. அத்தகைய பகுதிகளில், வனத்துறையினர், 'யானை வழித்தடம்' என, அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். கடந்தாண்டு

குன்னுார்: குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில், யானை வழித்தடத்தை அழிக்கும் செயலில், தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம், குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதிகளில், தண்ணீர், உணவுக்காக அவ்வப்போது, யானைகள், குறிப்பிட்ட சாலையை கடக்கின்றன. அத்தகைய பகுதிகளில், வனத்துறையினர், 'யானை வழித்தடம்' என, அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். கடந்தாண்டு ஈச்சமரம் அருகே, யானை வழித்தடத்தை மறித்து, தடுப்பு சுவர் எழுப்பும் போது, வனஉயிரின ஆர்வலர்களின் எதிரிப்பு கிளம்பியதால், குறிப்பிட்ட இடம் மட்டும் விடப்பட்டு, அறிவிப்பு போர்டு வைக்கப்பட்டது.இந்நிலையில், 'யானை வழித்தடம்' பலகை வைக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் பாலம் அருகே, யானை வழித்தடத்தை அழித்து, தடுப்பு சுவரும் இடிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை துறை மண்டல பொறியாளர் செல்வம் கூறுகையில், ''குறிப்பிட்ட பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.நீலகிரி கோட்ட கூடுதல் வனப் பாதுகாவலர் சரவணன் கூறுகையில், ''குறிப்பிட்ட இடத்தில் நாளை (இன்று) நேரடியாக சென்று ஆய்வு செய்து, யானைகள் செல்ல எந்த பாதிப்பும் இல்லாத வகையில், வழி ஏற்படுத்தப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X