தமிழ்நாடு

முதல்வரே, சொன்னீர்களே; செய்யலையே! ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆதங்கம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை: ஒப்பந்த முறையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாக தெரிவித்திருந்த சூழலில், ஒப்பந்த முறையை தொடரவும், தினக்கூலியை, 391 ரூபாயாக குறைத்தும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது, தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா இரண்டாவது அலையின் போது, ஆக்சிஜன்


கோவை: ஒப்பந்த முறையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாக தெரிவித்திருந்த சூழலில், ஒப்பந்த முறையை தொடரவும், தினக்கூலியை, 391 ரூபாயாக குறைத்தும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது, தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா இரண்டாவது அலையின் போது, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை மையங்களை திறக்க, முதல்வர் ஸ்டாலின் கோவை வந்திருந்தார். தனியார் கல்லுாரியில் அமைத்திருந்த மையத்தை திறந்து விட்டு புறப்பட்டபோது, அங்கு திரண்டிருந்த ஒப்பந்த பெண் துாய்மை பணியாளர்களை பார்த்து அவர்களிடம் விசாரித்தார்.அதற்கு, 'நாங்கள், மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளர்களாக இருக்கிறோம். எங்களை நிரந்தரம் செய்ய வேண்டும்' என, அவர்கள் தெரிவித்தனர்.'சரி, கண்டிப்பா செய்கிறேன்' என, உறுதியளித்து விட்டு முதல்வர் சென்னை புறப்பட்டார். சொன்னதை செய்வார் என்கிற நம்பிக்கையோடு, அவர்கள் காத்திருக்கின்றனர்.அதை தவிடுபொடியாக்கும் வகையில், குப்பை அள்ளும் பணி, தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் வழங்கும் பணி உட்பட உள்ளாட்சி அமைப்பு வேலைகள் அனைத்தையும் தனித்தனியாக பிரித்து, ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளவும், ஒவ்வொரு வேலைக்கும் எத்தனை ஊழியர்கள் நியமிக்க வேண்டும் என்று நிர்ணயித்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.அதில், மாநகராட்சி பகுதியில் ஒரு வார்டுக்கு ஒரு சுகாதார பணியாளர், நகராட்சிகளில் 2 வார்டுகளுக்கு ஒருவர் அல்லது, 8 கி.மீ., துாரத்துக்கு ஒரு ஊழியர் நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினச்சம்பளமாக, 391 ரூபாய் நிர்ணயித்து, பரிந்துரைத்திருப்பதால், ஒப்பந்த பணியாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.இதுதொடர்பாக, கோயமுத்துார் லேபர் யூனியன் ஜீவா முனிசிபல் தொழிலாளர் சங்க (ஏ.ஐ.டி.யு.சி.,) செயலாளர் செல்வராஜ் கூறியதாவது:உள்ளாட்சி அமைப்புகளில், நிரந்தர பணியாளர்களுக்கு, 45 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக வழங்கப்படுகிறது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பிடித்தம்போக, 9,000 ரூபாய் அளிக்கப்படுகிறது. கடந்த, 2015ல் முத்தரப்பு குழு, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பரிந்துரை செய்ததன் அடிப்படையில், மாதச்சம்பளம் ரூ.18 ஆயிரம் நிர்ணயித்து, அரசாணை வெளியிடப்பட்டது. அதன்பின், ஒப்பந்த பணியாளர்களுக்கு கலெக்டர் தினக்கூலி நிர்ணயிப்பது முரணானது. இதிலும், ஈரோடு கலெக்டர், 693 ரூபாய் நிர்ணயித்திருக்கிறார்; கோவை கலெக்டரோ, 450 ரூபாய் நிர்ணயித்திருக்கிறார். இதுவும் அமல்படுத்தப்படவில்லை.இச்சூழலில், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 391 ரூபாயாக கூலியை குறைத்து நிர்ணயித்திருப்பது, வேதனையை அளிக்கிறது. இதெல்லாம், முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு தெரிந்தே நடக்கிறதா எனத்தெரியவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X