தமிழ்நாடு

கோடநாடு வழக்கில் கைதான ரமேஷ் உடல் நிலை பாதிப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஊட்டி: கோடநாடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ரமேசுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதால் நேற்றிரவு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில், தொடர்புடையதாக கூறப்படும் ஜெ., கார் டிரைவர் கனகராஜ், விபத்தில் பலியானார். இந்நிலையில், இவரது சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் கோடநாடு வழக்கில் தடயங்களை அழித்த

ஊட்டி: கோடநாடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ரமேசுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதால் நேற்றிரவு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில், தொடர்புடையதாக கூறப்படும் ஜெ., கார் டிரைவர் கனகராஜ், விபத்தில் பலியானார். இந்நிலையில், இவரது சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் கோடநாடு வழக்கில் தடயங்களை அழித்த குற்றச்சாட்டில் கடந்த அக். 25ல் கைது செய்யப்பட்டனர்.ஊட்டி கோர்ட் இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்த காவல் முடிந்து கடந்த நவ., 8 ல் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது, இருவருக்கும் மீண்டும், 15 நாள் காவல் நீடிக்கப்பட்டது. நவ., 22 ல் கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி சஞ்சய்பாபா உத்தரவிட்டார். கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில், ரமேஷ் சிறுநீரக பாதிப்பால் அவதியடைந்தார். ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்த நிலையில், உடல்நிலை மோசமானதால், மேல் சிகிச்சைக்காக நேற்றிரவு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X