தமிழ்நாடு

பள்ளியில் வழிகாட்டல் குழு அமைக்க வேண்டும்: கூடுதல் எஸ்.பி., தகவல்

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை: ''பள்ளிகளில் வழிகாட்டல் குழு அமைக்கப்பட்டு உள்ளதா என்று போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கண்காணிக்க வேண்டும்,'' என, கூடுதல் எஸ்.பி., சுஹாசினி அறிவுறுத்தியுள்ளார்.கோவை போலீசில் பணிபுரியும் பெண் போலீசாருக்கான கலந்தாய்வு கூட்டம் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., சுஹாசினி கூறியதாவது:



கோவை: ''பள்ளிகளில் வழிகாட்டல் குழு அமைக்கப்பட்டு உள்ளதா என்று போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கண்காணிக்க வேண்டும்,'' என, கூடுதல் எஸ்.பி., சுஹாசினி அறிவுறுத்தியுள்ளார்.கோவை போலீசில் பணிபுரியும் பெண் போலீசாருக்கான கலந்தாய்வு கூட்டம் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., சுஹாசினி கூறியதாவது: பெண்கள் படிக்கும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பணிபுரியும் நிறுவனங்களுக்கு போலீசார் நேரில் சென்று போக்சோ, பாலியல் தொல்லைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பள்ளி, கல்லுாரிகளில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளதா, முறையாக செயல்படுகிறதா என, கண்காணிக்க வேண்டும்.பாலியல் ரீதியான தொல்லைகள் ஏற்பட்டால், எவ்வாறு புகார் அளிக்க வேண்டும். என, விளக்க வேண்டும். மாணவிகள் புகார் தெரிவித்தால், அதன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்து பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.பெண்கள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் 94981 81212, 0422- 2300999 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, கூடுதல் எஸ்.பி., பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X