தமிழ்நாடு

மது அருந்தி மூவர் பலியான சம்பவத்தில் திருப்பம்! விஷம் கலந்து கொடுத்த பெயின்டர் கைது

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை: கோவையில் தீபாவளி தினத்தன்று மது அருந்தி மூன்று பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக, விஷம் கலந்து கொடுத்த பெயின்டரை போலீசார் கைது செய்தனர்.கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர்கள் பெயின்டர்கள் சக்திவேல், 60, பார்த்திபன், 31, சமையல் தொழிலாளி முருகானந்தம், 55; இவர்கள் மூவரும் நவ., 3ம் தேதி இரவு மது அருந்தி மறுநாள் காலை, அடுத்தடுத்து உயிரிழந்தனர். பிரேதப்



கோவை: கோவையில் தீபாவளி தினத்தன்று மது அருந்தி மூன்று பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக, விஷம் கலந்து கொடுத்த பெயின்டரை போலீசார் கைது செய்தனர்.கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர்கள் பெயின்டர்கள் சக்திவேல், 60, பார்த்திபன், 31, சமையல் தொழிலாளி முருகானந்தம், 55; இவர்கள் மூவரும் நவ., 3ம் தேதி இரவு மது அருந்தி மறுநாள் காலை, அடுத்தடுத்து உயிரிழந்தனர். பிரேதப் பரிசோதனையில், மதுவில், விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இதற்கிடையே, பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பெயின்டரான ராஜசேகர், 63 என்பவரையும் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், மூன்று பேரையும் திட்டமிட்டு விஷம் கொடுத்து கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.ரேஸ்கோர்ஸ் போலீசார் கூறியதாவது:உயிரிழந்த மூன்று பேருக்கும், ராஜசேகருக்கும் இடையே தொழில் ரீதியாக பழக்கம் இருந்துள்ளது. இதனடிப்படையில், அவரது வீட்டுக்கு இவர்கள் சென்று வருவது வழக்கம். அவ்வாறு சென்று வந்த போது இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்னை தொடர்பாக முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இதை மனதில் வைத்து, மூன்று பேரையும் பழிவாங்க ராஜசேகர் நினைத்தார். அதன்படி, ராஜசேகர், வெளிநாட்டில் இருந்து மது வந்திருப்பதாகவும், இரண்டு ஆண்டுகளாக நான் மது அருந்துவதை நிறுத்த விட்டதால், மூன்று பேரும் குடித்து கொள்ளுங்கள் என, சயனைடு கலந்த மதுவை கொடுத்துள்ளார். இதை குடித்த அவர்கள், பலியாயினர்.அதிகளவு மது போதையில் மூவரும் உயிரிழந்துவிட்டதாக போலீசார் வழக்கை முடித்து விடுவார்கள் என்று ராஜசேகர் நினைத்துள்ளார். ஆனால், பல்வேறு கோணங்களில் தொடர் விசாரணை நடத்தியதில் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டார்.இவ்வாறு, போலீசார் கூறினர்.ராஜசேகரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளியை கைது செய்த ரேஸ்கோர்ஸ் போலீசாரை, கமிஷனர் மற்றும் துணை கமிஷனர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X