தமிழ்நாடு

தளவானூர் அணை வெடி வைத்து தகர்ப்பு

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
விழுப்புரம் :விழுப்புரம் அடுத்த தளவானுாரில் சேதமடைந்த தடுப்பணை, வெடி வைத்து தகர்க்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், தளவானுார் மற்றும் கடலுார் மாவட்டம், எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, 2020ல் அ.தி.மு.க., ஆட்சியில் 25.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டது.கடந்த 9ம் தேதி, அணையில் உள்ள மண் தடுப்புச் சுவர் ஆற்று நீரில் கரைந்து அடித்து சென்றது.
தளவானுார் அணை வெடி வைத்து தகர்ப்பு

விழுப்புரம் :விழுப்புரம் அடுத்த தளவானுாரில் சேதமடைந்த தடுப்பணை, வெடி வைத்து தகர்க்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், தளவானுார் மற்றும் கடலுார் மாவட்டம், எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, 2020ல் அ.தி.மு.க., ஆட்சியில் 25.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டது.கடந்த 9ம் தேதி, அணையில் உள்ள மண் தடுப்புச் சுவர் ஆற்று நீரில் கரைந்து அடித்து சென்றது.


கரும்பு தோட்டம்




latest tamil news


இதனால், விழுப்புரம் மார்க்கமுள்ள வலதுபுறம் அணையின் முதல் ஷட்டர் முற்றிலுமாக சேதமானது. 11ம் தேதி கரைப்பகுதி மேலும் 50 மீட்டர் சரிந்து, அருகில் உள்ள தோட்டங்களில் தண்ணீர் புகுந்து, கரும்பு பயிர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.தண்ணீர் ஊருக்குள் புகாமல் இருக்கவும், தண்ணீர் நேராக செல்லவும், சேதமான அணையின் ஷட்டர்களை வெடி வைத்து தகர்க்க முடிவு செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் மாலை ஜெலட்டின் குச்சிகள் வைத்து வெடிக்க வைத்தும், அணை சிறிய விரிசல்களோடு சாயாமல் நின்றது.நேற்று காலை 8:00 மணிக்கு சென்னை தொழிலாளர்கள் 20 பேர், வெடி மருந்துகளை 47 இடங்களில் துளையிட்டு, அதில் 47 ஜெலட்டின் குச்சிகள், 300
டெட்டனேட்டர்களை வைத்தனர்.

பணிகள் அனைத்தும் மாலை 3:00 மணிக்கு முடிந்த நிலையில், 3:30 மணிக்கு அவை வெடிக்க வைக்கப்பட்டன.பெரிய சத்தத்தோடு அணையின் மதகுகள் உள்ள மேற்புறம் முற்றிலுமாக கீழே விழுந்தது. கீழ்புறத்தில் உள்ள ஷட்டர் பகுதி மற்றும் தடுப்புச் சுவர்கள் மட்டும் விழாமல் இருந்தது. நேற்று நடந்த முயற்சியில், அணை 70 சதவீதம் தகர்க்கப்பட்டது.மீதமுள்ள 30 சதவீதம் பகுதிகள், இன்று கிரேன் மூலம் தண்ணீரில் கீழே தள்ளி தகர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


திடீர் மறியல்



தற்போது, சேதமடைந்த அணையின் உடைந்த பகுதியின் வழியாக ஆற்று நீர் செல்லத் துவங்கியுள்ளது. இதனால், கரை பகுதி வழியாக செல்வது ஓரளவு குறைந்துள்ளது.
முழுதுமாக அகற்றியவுடன் ஆற்றுநீர் நேராக கடலுக்குள் செல்லும். பின், உடைந்த கரைப்பகுதி, கருங்கற்கள் மற்றும் மணல் மூட்டைகள் வாயிலாக சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதற்கிடையில், தளவானுார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர், நேற்று மாலை 4:00 மணிக்கு மேல், புதிய அணையை துரிதமாக கட்டி தரக் கோரி திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார், அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-நவ-202109:17:55 IST Report Abuse
பேசும் தமிழன் இதில் எத்தனை கோடி ஆட்டைய போட்டு உள்ளார்கள் என்று தெரியாது.... தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
16-நவ-202108:22:59 IST Report Abuse
VENKATASUBRAMANIAN திமுக எந்த நடவடிக்கையும் எடுக்காது. ஏனென்றால் அவர்களுக்கும் இதில் பங்கு உள்ளது. மக்களை ஏமாற்ற விசாரணை கமிஷன் என்று ஆரம்பிப்பார்கள். அப்புறம் கிடைப்பில் போடப்படும்
Rate this:
Cancel
Rajamani K - Chennai,இந்தியா
16-நவ-202106:33:09 IST Report Abuse
Rajamani K இன்றைய பொறியாளர்களைப் பார்த்து கரிகாலன் சிரிப்பான்
Rate this:
16-நவ-202112:26:35 IST Report Abuse
அப்புச்சாமிகல்லணையைக் கட்டியவன் அசல் அறிவுள்ள தமிழன். உடைஞ்ச தடுப்பணையை முற்றிலும் வெடி வெச்சு இடிப்பவன் ஓங்கோல் தமிழன். நடுவிலே தடுப்பணை கட்டி ஆட்டையப் போட்டவன் இடுப்பு பாட்டு தமிழன்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X