கான்பாளையம் 4 வது தெருவில் தேங்கிய கழிவுநீரால் சீர்கேடு

Added : நவ 16, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாநகராட்சி 73வது வார்டு முனிச்சாலை ரோடு கான்பாளையம் 4வது தெருவில் ஒரு வாரமாக பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுள்ளது.அப்பகுதி குடியிருப்போர் கூறியதாவது: தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் பொங்கி தேங்கியுள்ளது. தெருவில் சிதறியுள்ள குப்பை பாதாள சாக்கடையில் விழுந்து

மதுரை : மதுரை மாநகராட்சி 73வது வார்டு முனிச்சாலை ரோடு கான்பாளையம் 4வது தெருவில் ஒரு வாரமாக பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுள்ளது.

அப்பகுதி குடியிருப்போர் கூறியதாவது: தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் பொங்கி தேங்கியுள்ளது. தெருவில் சிதறியுள்ள குப்பை பாதாள சாக்கடையில் விழுந்து அடைப்பு ஏற்படுவது இதற்கு காரணம். குப்பை வாங்க மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக தினமும் வருவதில்லை.தெருவில் குப்பை தொட்டி இல்லை. முனிச்சாலை ரோடு வரை சென்று குப்பை கொட்டப்படுகிறது.

குப்பை தொட்டியை சுற்றி அசுத்தம் செய்து வைத்துள்ளனர். தெருவில் தேங்கிய கழிவுநீரை மாநகராட்சி பணியாளர்கள் அகற்ற முயற்சித்தும் முடியவில்லை. நேற்றும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.பல நாட்களாக இது குறித்து அருகில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்த கழிவுநீரால் கொசுக்கள் பெருகி டெங்கு உள்ளிட்ட பல நோய்கள் பரவுகிறது. கழிவுநீர் பிரச்னைக்கு மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் தெற்கு தொகுதி ம.தி.மு.க., எம்.எல்.ஏ., பூமிநாதன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X