தமிழ்நாடு

அ.தி.மு.க., கூட்டணியை தொடர தமிழக பா.ஜ.,வினர் வலியுறுத்தல்

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை :'தி.மு.க.,வின் அதிகார பலத்தையும், ரவுடியிசத்தையும் எதிர்கொள்ள, அ.தி.மு.க., கூட்டணியை தொடர வேண்டும்' என, பா.ஜ., மேலிட பொறுப்பாளர்களிடம், அக்கட்சி தமிழக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி விவகாரம் தொடர்பாக, மாநில தலைவர்
 அ.தி.மு.க., கூட்டணி,தமிழக பா.ஜ.,வினர் வலியுறுத்தல்


சென்னை :'தி.மு.க.,வின் அதிகார பலத்தையும், ரவுடியிசத்தையும் எதிர்கொள்ள, அ.தி.மு.க., கூட்டணியை தொடர வேண்டும்' என, பா.ஜ., மேலிட பொறுப்பாளர்களிடம், அக்கட்சி தமிழக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி விவகாரம் தொடர்பாக, மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, 'அ.தி.மு.க., கூட்டணியை தொடரலாமா, வேண்டாமா என்பது குறித்து கருத்துக்களை தெரிவிக்கலாம்' என, மேலிட பொறுப்பாளர்கள் கூறினர்.


latest tamil newsஅதற்கு சிலர், 'சட்டசபை தேர்தல் மற்றும் ஒன்பது மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.,வினர் கேட்ட இடங்களை தரவில்லை. இடங்களை ஒதுக்குவதில் கடைசி நேரம் வரை இழுத்தடிப்பு செய்வது கவலை ஏற்படுத்துகிறது. இதையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் செய்வர். பலத்தை தெரிந்து கொள்ள சுய பரிசோதனை செய்ய வேண்டும். அதற்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது தான் நல்லது. அ.தி.மு.க., கூட்டணி வேண்டாம்' என்றனர்.
மற்ற பலரும், 'இறை நம்பிக்கை உள்ளிட்ட கொள்கை சித்தாந்த அடிப்படையில் பா.ஜ., உடன், அ.தி.மு.க., ஒத்துப்போகிறது. தி.மு.க.,வின் அதிகார பலம், பண பலத்தை, பா.ஜ.,வினரால் தனித்து எதிர்கொள்ள முடியாது. இந்த சூழலில், அ.தி.மு.க., உடன் கூட்டணியை தொடர்வது தான், பா.ஜ.,வுக்கு உதவியாக இருக்கும்' என்றனர்.
இந்த விபரங்களை, தேசிய தலைவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக, மேலிட பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ketheesh Waran - Bangalore,இந்தியா
16-நவ-202113:19:37 IST Report Abuse
Ketheesh Waran அ.தி.மு.க., உடன் கூட்டணியை பா.ஜ.க. தொடர்வது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதட்கு ஓப்பனானது. பா.ஜ.க. உடன் அ.தி.மு.க., கூட்டணியை தொடர்வது கெடுகுடி சொல் கேளாது என்பதட்கு ஓப்பனானது. இனிவரும் காலங்களில் அ.தி.மு.க. மற்றும் பிஜேபி தமிழகத்தில் இருந்து மறைந்துவிடும், இந்த வெற்றிடத்தை மக்கள் நீதி மையம் மற்றும் நாம் தமிழர் கட்சிகள் நிரப்பவேண்டும்
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
16-நவ-202112:34:01 IST Report Abuse
Raman அதிமுகவை ஒழிக்காம விடமாட்டாங்க போல.. ஹி ஹி ஹி
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
16-நவ-202111:08:14 IST Report Abuse
Abdul Aleem Iyya athimuka thalaivargale thayavu seithu BJP koottaniyai vittu vilagunggal
Rate this:
Suri - Chennai,இந்தியா
16-நவ-202113:13:49 IST Report Abuse
Suriபின்னாடியே ரைடு வந்தா நீங்க காப்பாற்றுவீர்களா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X