பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பணை சேதத்தால் வெளியேறும் தண்ணீர்; ஸ்ரீராமபுரம் பொதுமக்கள் வேதனை

Added : நவ 16, 2021
Share
Advertisement
வேடசந்தூர் : வேடசந்தூரின் கிழக்குப் பகுதியில் உள்ளது ஸ்ரீராமபுரம் ஊராட்சி. 20 கிராமங்களைக் கொண்ட இவ்வூராட்சியில், விவசாயம், கால்நடை வளர்ப்பு முக்கிய தொழில். ஏராளமான இளையோர் நூற்பாலை பணிக்கும் செல்கின்றனர். ஆழ்துளை கிணறுகள், காவிரி நீர் வினியோகம் உள்ளதால் குடிநீர் வசதி, வேடசந்தூர் - வடமதுரை ரோடு நகரின் மத்தியில் செல்வதால் போக்குவரத்து வசதிக்கும் குறைவில்லை.ஆனாலும்
 தடுப்பணை சேதத்தால் வெளியேறும் தண்ணீர்;   ஸ்ரீராமபுரம் பொதுமக்கள் வேதனை


வேடசந்தூர் : வேடசந்தூரின் கிழக்குப் பகுதியில் உள்ளது ஸ்ரீராமபுரம் ஊராட்சி. 20 கிராமங்களைக் கொண்ட இவ்வூராட்சியில், விவசாயம், கால்நடை வளர்ப்பு முக்கிய தொழில். ஏராளமான இளையோர் நூற்பாலை பணிக்கும் செல்கின்றனர்.

ஆழ்துளை கிணறுகள், காவிரி நீர் வினியோகம் உள்ளதால் குடிநீர் வசதி, வேடசந்தூர் - வடமதுரை ரோடு நகரின் மத்தியில் செல்வதால் போக்குவரத்து வசதிக்கும் குறைவில்லை.ஆனாலும் இவ்வூராட்சியில் சில ஆண்டுகளாகவே எந்த முக்கிய பணிகளும் நடக்கவில்லை என்ற குமுறல் மக்களிடையே உள்ளது. குறிப்பாக குடிநீர், தெருவிளக்கு வசதியை தவிர வேறெந்த வசதியும் செய்து தரவில்லை என்கின்றனர்

பொதுமக்கள்.சேதமடைந்த தொகுப்பு வீடுகள் சி.குமார், ேல்மாத்தினிபட்டி: இங்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு முப்பது தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்தனர். தற்போது இவை சேதமடைந்ததால் பொதுமக்கள் வசிக்க முடியாமல் தவிக்கின்றனர். பலரது வீடுகளில் மேற்கூரை சேதமடைந்துள்ளது.

வேலன் லட்சுமி என்பவர் வீட்டின் மேற்கூரை முற்றிலும் இடிந்து போனதால், தற்போது வீட்டின்முன்பு சிறிய கூரை அமைத்து குடியிருக்கின்றனர்.வீட்டின் உள்பகுதியில் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மழைக் காலங்களில் வீடுகளில் தூங்கவே அஞ்சுகின்றனர். மாவட்ட நிர்வாகம் புதிய தொகுப்பு வீடுகளை கட்டித் தரவேண்டும். நந்தனார் தெருவில் மழைநீர் தேங்கி நிற்பதால், இங்கு சிமென்ட் ரோடு, கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும் என முதல்வர் தனிப் பிரிவில் மக்கள் மனு அளித்தனர். ஒரு மாதம் கழித்து பணிகள் நடப்பதாக பதில் வந்தது.

ஆனால் இங்கே எந்த பணியும் இதுவரை நடைபெறவில்லை.பயன்பாடற்ற தடுப்பணைஆ.சீனிவாசன், சமூக ஆர்வலர், வேடசந்தூர்: ஆர்.கோம்பை ரோட்டில் உள்ள கன்னிமார்புரம் அருகே சிற்றோடையில் வலுவான தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.இந்த அணையில் கரைப்பகுதி சேதமடைந்துள்ளதால் தண்ணீர் முழுவதும் வெளியேறுகிறது. நுாறு நாள் திட்ட பணியாளர்களைக் கொண்டு இக்கரையை சரி செய்திருந்தால் தற்போதைய மழைக்கு தண்ணீரைத் தேக்கி வைத்திருக்கலாம்.மழைநீர் தேங்கி நின்றால் அப்பகுதி விவசாய கிணறுகள் மற்றும் போர்வெல்களில் குடிநீர் கிடைத்திருக்கும்.

தடுப்பணை கட்டும் அரசின் நோக்கமும் நிறைவேறி இருக்கும். ஆனால் ஊராட்சி நிர்வாகம் அதையெல்லாம் கண்டு கண்டுகொள்ளாததால், இந்த தடுப்பணை பயன்பாடின்றி உள்ளது என்றார்.தடுப்புச் சுவர் வேண்டும்பி.முருகன், தலைவர், ஸ்ரீராமபுரம் ஊராட்சி: மேல்நாட்டு பட்டியில் 24 தொகுப்பு வீடுகள் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளது. பிரதமரின் தொகுப்பு வீடுகள் திட்டத்தில் வீடு கட்ட ரூ.2.10 லட்சம் ஒதுக்கப்படுகிறது.

இந்த நிதி போதாது என்றாலும், கூடுதல் செலவில் வீடு கட்ட அவர்கள் தயாராக இல்லை. அரசே வீடு கட்டித் தந்தால்தான் அவர்கள் பயன் பெற முடியும். அதேபோல் கன்னிமார்புரம் அருகே உள்ள தடுப்பணை உடைப்பை, மண் போட்டு சரி செய்ய முடியாது. அங்கு புதிதாக தடுப்புச் சுவர் எழுப்ப வலியுறுத்தியுள்ளோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X