தமிழ்நாடு

அரசு மருத்துவமனை குழந்தைகள் நல பிரிவுக்கு இடம் தேவை... ஆவின் பால் பண்ணை அருகே அரசு நிலம் ஒதுக்குமா

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் நெருக்கடியான இடத்தில் பாழடைந்த கட்டடத்தில் செயல்படும் குழந்தைகள் நலப் பிரிவுக்கு ஆவின் பால் பண்ணை அருகேவுள்ள 2 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கி கட்டுமான பணியை துவங்க வேண்டும்.தற்போதுள்ள கட்டடத்தில் தினமும் வெளி நோயாளிகள் 300 பேர் வரை மருத்துவம் பெறுகின்றனர். அறுவை சிகிச்சை பிரிவில் 100க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளாக 12 வயதுக்குட்பட்ட
அரசு மருத்துவமனை குழந்தைகள் நல பிரிவுக்கு இடம் தேவை...  ஆவின் பால் பண்ணை அருகே அரசு நிலம் ஒதுக்குமா

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் நெருக்கடியான இடத்தில் பாழடைந்த கட்டடத்தில் செயல்படும் குழந்தைகள் நலப் பிரிவுக்கு ஆவின் பால் பண்ணை அருகேவுள்ள 2 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கி கட்டுமான பணியை துவங்க வேண்டும்.

தற்போதுள்ள கட்டடத்தில் தினமும் வெளி நோயாளிகள் 300 பேர் வரை மருத்துவம் பெறுகின்றனர்.

அறுவை சிகிச்சை பிரிவில் 100க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளாக 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெறுகின்றனர். கட்டட முன்பகுதி, பின்பகுதி துாண்கள் விரிசல் அடைந்துள்ளன. மழை பெய்தால் வார்டுக்குள் தண்ணீர் ஒழுகுகிறது. புதிய கட்டடம் கட்ட ரூ.90 கோடிக்கு ஒப்புதல் கேட்டு இரண்டாண்டுகளாகியும் அனுமதி கிடைக்கவில்லை.

அரசு மருத்துவமனையின் 22 ஏக்கரில் கட்டடங்கள் அதிகம் உள்ளன. பழையதை இடித்து விட்டு அதே இடத்தில் தான் புதிதாக கட்டடங்கள் கட்டப்படுகிறது. இதனால் நெருக்கடியும் நோயாளிகளுக்கு போதுமான காற்றோட்ட வசதியும் கிடைக்கவில்லை. ரூ. பல நுாறு கோடி செலவில் கட்டப்பட்ட மகப்பேறு பிரிவும் புதிதாக கட்டப்படும் கட்டடத்திலும் பார்க்கிங் வசதி செய்யவில்லை.

எனவே குழந்தைகள் நலப் பிரிவை மீண்டும் இடித்து அங்கு கட்டினால் மறுபடியும் இடநெருக்கடி ஏற்படும். அனைத்து வகை நோயாளிகளுடன் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பொது இடத்தில் சாப்பிடுவதால் அவர்கள் எளிதில் பலவீனமாகவும் வாய்ப்புள்ளது. மதுரை ஆவின் பால் பண்ணை அருகே இரண்டு ஏக்கர் அரசு நிலம் உள்ளது.

சென்னை எக்மோரில் உள்ள குழந்தைகள் நலப்பிரிவைப் போல அரசு இடத்தில் ஒன்றரை ஆண்டுக்குள் கட்டி முடித்தால் குழந்தைகளுக்கான தனி சிகிச்சை மையமாக இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X