பொது செய்தி

தமிழ்நாடு

குறைதீர் முகாமில் நலத்திட்டம் வழங்கல்

Added : நவ 16, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர் முகாமில் 15 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை கலெக்டர் விசாகன் வழங்கினார்.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்களிடம் இருந்து 352 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். 15 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர் முகாமில் 15 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை கலெக்டர் விசாகன் வழங்கினார்.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்களிடம் இருந்து 352 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். 15 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். டி.ஆர்.ஓ., லதா, கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், தனித்துணை ஆட்சியர் ராஜசேகர், நேர்முக உதவியாளர் மாறன் உடனிருந்தனர்.விளையாட்டு மைதானம் கேட்டு பாச்சலுார் இளைஞர்கள் மனு கொடுத்தனர்.

அவர்கள் கூறியிருப்பதாவது, ''இங்குள்ள விளையாட்டு மைதானத்தை அரசு அதிகாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். அந்த இடத்தில் பஞ்சாயத்து மற்றும் அரசு கட்டடம் கட்டியுள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள மைதானத்தை மீட்டுத் தர வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X