பொது செய்தி

தமிழ்நாடு

* பள்ளிக்கு செல்லாத மாணவர்கள்* திண்டுக்கல்லில் 4 ஆயிரம் பேர் கண்டுபிடிப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிக்கு செல்லாத 6 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் 4 ஆயிரத்து 534 பேர் இருப்பதாக கணக்கெப்பில் தெரியவந்துள்ளது.பதினெட்டு வயதிற்கு உட்பட்ட அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன. இருப்பினும் வறுமை, குடும்பச் சூழல் காரணமாக ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான


திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிக்கு செல்லாத 6 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் 4 ஆயிரத்து 534 பேர் இருப்பதாக கணக்கெப்பில் தெரியவந்துள்ளது.

பதினெட்டு வயதிற்கு உட்பட்ட அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன. இருப்பினும் வறுமை, குடும்பச் சூழல் காரணமாக ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதை தடுக்க, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் ஆண்டுதோறும் பள்ளி செல்லாத மாணவர்களை கண்டறிந்து அவர்களும் கற்க ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன்படி இந்தாண்டு ஆக.10 முதல் கணக்கெடுப்பு துவங்கியது.கொரோனா தொற்று குறைந்துள்ளதால் 1-12 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் பள்ளி செல்லாத மாணவர்கள் குறித்து தொடர்ந்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இப்பணியில் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.வீடு வீடாக சென்று மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தற்போது வரை 4 ஆயிரத்து 534 மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் குறித்த விபரம் 'சர்வே ஆப்'பில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இம்மாணவர்கள் கல்வி பயில ஏற்பாடு நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X