பொது செய்தி

தமிழ்நாடு

கொள்முதல் நெல்லுக்கு பணம் வழங்கப்படுமா

Added : நவ 16, 2021
Share
Advertisement
மதுரை : 'மாவட்டத்தில் கொடிகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செயல்படும் மையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குரிய பணத்தை அரசு வழங்க வேண்டும்,' என, மதுரையில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலெக்டர் அனீஷ்சேகரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முறையிட்டனர்.சங்க மாவட்ட தலைவர் இளங்கோவன் மற்றும் விவசாயிகள் கூறியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப

மதுரை : 'மாவட்டத்தில் கொடிகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செயல்படும் மையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குரிய பணத்தை அரசு வழங்க வேண்டும்,' என, மதுரையில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலெக்டர் அனீஷ்சேகரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முறையிட்டனர்.

சங்க மாவட்ட தலைவர் இளங்கோவன் மற்றும் விவசாயிகள் கூறியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் செயல்படும் மையங்களில் கொள்முதல் செய்த நெல்லுக்கு ஒரு மாதமாகியும் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. வாங்கிய கடனை விவசாயிகள் திரும்பசெலுத்த முடியாமல் 2ம் போக சாகுபடி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.

ஒரு போக, இரு போக பாசன பகுதிகளில் யூரியா, பொட்டாஷ், அமோனியம் குளோரைடு உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.கண்மாய்க்கு தண்ணீர்திருமங்கலம் தாலுகா புங்கங்குளம் கிராமத்தினர் அளித்த மனு: புங்கங்குளம் கண்மாய்வுக்கு மழைநீர் வரும் வகையில் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்.

இதுகுறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.மதுக்கடையால் பிரச்னைபழங்காநத்தம் ரெடிமேட் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் அளித்த மனு: எங்கள் நிறுவனத்தில் 300 பெண்கள் பணிபுரிகின்றனர். நிறுவனத்திற்கு அடுத்த கட்டடத்தில் அரசு மதுக்கடை (எண்:5199) செயல்படுகிறது. குடிமகன்களால் பெண்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. கடையை வேறிடத்திற்கு மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும் என்றனர்

.மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கலெக்டர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார், துணை கலெக்டர் புகாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X