பொது செய்தி

தமிழ்நாடு

கிரிவீதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
பழநி : பழநியில் நேற்று முகூர்த்த நாளை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தது.குளத்து ரோடு, பூங்கா ரோடு, கிரி வீதி பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி இருந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை வின்ச் ஸ்டேஷன் அருகில் உள்ள மகிஷாசுரமர்த்தினி கோயில் முன்புறம் காய்ந்த மரம் ஒன்று ரோட்டின் குறுக்கே வேரோடு சாய்ந்தது.
 கிரிவீதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பழநி : பழநியில் நேற்று முகூர்த்த நாளை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தது.குளத்து ரோடு, பூங்கா ரோடு, கிரி வீதி பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி இருந்தனர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை வின்ச் ஸ்டேஷன் அருகில் உள்ள மகிஷாசுரமர்த்தினி கோயில் முன்புறம் காய்ந்த மரம் ஒன்று ரோட்டின் குறுக்கே வேரோடு சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக பக்தர் களுக்கும், வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. சிறிதுநேரம் போக்குவரத்து பாதித்தது.கீழே விழுந்த மரத்தின் அருகே இருந்த பழைய முடி காணிக்கை செலுத்தும் மண்டபம் சேதமடைந்தது.

இதையறிந்த அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்தனர். மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், 'காய்ந்த நிலையில் இருந்த இம்மரம், மழைக்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் விழ வாய்ப்புள்ளது. உடனே நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் தெரிவித்தோம். அதை கண்டு கொள்ளவில்லை.

எச்சரித்தபடியே தற்போது மரம் விழுந்துவிட்டது. வரும் நாட்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X