இந்தியா

விமானத்தில் பறந்தாரா ராவணன்? ஆய்வு செய்கிறது இலங்கை!

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
கொழும்பு :ராவணனிடம் விமானம் இருந்ததாகவும், அதில் இந்தியாவுக்கு பறந்து வந்ததாகவும் ராமாயணத்தில் உள்ள குறிப்புகள் குறித்து இலங்கை அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இதில், இந்தியாவும் இணைந்து பங்கேற்க அந்நாட்டு ஆய்வாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.ஆலோசனை கூட்டம் நம் அண்டை நாடான இலங்கையின் அரசனான ராவணன் விமானம் வைத்து இருந்ததாகவும், அதில் இந்தியாவுக்கு
விமானம், பறந்தாரா, ராவணன்?, ஆய்வு, இலங்கை!

கொழும்பு :ராவணனிடம் விமானம் இருந்ததாகவும், அதில் இந்தியாவுக்கு பறந்து வந்ததாகவும் ராமாயணத்தில் உள்ள குறிப்புகள் குறித்து இலங்கை அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இதில், இந்தியாவும் இணைந்து பங்கேற்க அந்நாட்டு ஆய்வாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


ஆலோசனை கூட்டம்latest tamil news
நம் அண்டை நாடான இலங்கையின் அரசனான ராவணன் விமானம் வைத்து இருந்ததாகவும், அதில் இந்தியாவுக்கு பறந்து வந்து சீதையை கடத்தி சென்றதாகவும், ராமாயணத்தில் குறிப்புகள் உள்ளன. ராமாயணத்தை புனையப்பட்ட இதிகாசம் என சிலர் புறந்தள்ளினாலும், ராவணன் என்ற அரசன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இலங்கையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதையடுத்து, ராவணன் ஆட்சியின் போது இலங்கையில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்வது குறித்து, கொழும்பு நகரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆலோசனை கூட்டம் நடந்தது.


மீண்டும் துவக்கம்இதில், விமான போக்குவரத்து துறை நிபுணர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், புவியியலாளர்கள்
பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், ராவணன் தன் விமானம் வாயிலாக இந்தியாவுக்கு முதன்முதலாக பறந்து சென்று, மீண்டும் இலங்கை திரும்பியதாக கூறப்பட்டது.இது குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வுக்காக இலங்கை அரசு, 20 லட்சம் ரூபாய் நிதியை அப்போது ஒதுக்கியது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையில் தற்போதுள்ள இலங்கை அரசு, இதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வாக கருதுகிறது.

இதையடுத்து, அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த ஆய்வு மீண்டும் துவங்குகிறது.இலங்கையின் விமான வரலாறு குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவரும், அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவருமான சசி தனதுங்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது:ராவணன், இதிகாசத்திற்காக புனையப்பட்ட கற்பனை கதாபாத்திரம் அல்ல. அவர் உண்மையில் வாழ்ந்த அரசன். அவரிடம் விமானங்களும், விமான நிலையங்களும் இருந்தன.
அவை இன்றைய விமானங்களை போலி இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவை வேறு தொழில்நுட்பத்தில் இயங்கி இருக்கக்கூடும். அந்த காலத்தில், இலங்கை மற்றும் இந்தியாவில் பல நவீன தொழில்நுட்பங்கள் இருந்துள்ளன. இது குறித்து விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ள இருக்கிறோம்.


பழங்கால சாதனைஇந்த ஆய்வு, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்தது. நம் பழங்கால சாதனைகளை உலகுக்கு உணர்த்த, இந்த ஆய்வில் இந்திய
அரசும் இணைந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
18-நவ-202102:31:31 IST Report Abuse
மலரின் மகள் அருமை அருமை. தினமலர் இதற்கென்றே தனியாக ஒரு விவாத கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் தளத்தை உருவாக்கலாம். நாமும் இணைவோம் இராமாயணத்தை புதிய கோணத்தில் முற்றிலும் அறிந்து கொள்வதற்கு. திரு முருகராஜ் அவர்களின் பேணா இதனை துவக்கி வைக்கலாம். எனக்கு பிடித்த பத்திரிகையாளர் அவர் தான். வரலாற்று இதிகாச இலக்கிய ஆவணங்கள் நிரம்பி கிடக்கின்றன. இது ஒரு சிறந்த முயற்சி. இதை செய்வரோய்ன் முழு தகவலையும் தாருங்கள் நாமும் இணைவோம். முதலில் நாம் ரா, ல போன்ற பெயர்ச்சொற்களை எழுதும் பொது இரா, இல என்றே எழுத பழகுவோம் என்ற விண்ணப்பத்துடன் ஆரம்பிப்போம். இராவணன் தமிழன் என்போரும் ஆரியன் என்போரும் பல்வேறுவகையில் பேசுகிறார்கள். இராவணனால் தமிழன் என்றாலும் சிறப்பே. பாரதம் முழுவதும் பரவியிருந்த மொழி தமிழே என்று சொல்கிறோம். பாரதத்தின் மொழி உலகின் முன்தோன்றிய தமிழ் தான் என்றும் பெருமை கொள்கிறோம். இராவணனின் பூர்விகம் நொய்டா அருகே உள்ள பிஸ்ரக் என்ற கிராமம். விஸ்வராசு என்ற மன்னனுக்கு முதல் மனைவி மூலம் பிறந்தவர் குபேரன். இரண்டாவது மனைவி மூலம் பிறந்தவர்கள் இராவணன், கும்பகர்ண, விபூஷண, சகோதரர்கள். குபேரன் ஆண்ட தேசம் இலங்கை. மேலும் இலங்கையின் முதல் மன்னனும் அவனே. அவனுக்கு சொந்தமானது தான் புஸ்பக விமானம். இராவணனால் குபேரனை விரட்டி விட்டு இலங்கை தேசத்தை கைப்பற்றி ஆட்சி புரிந்தான். மிக்க சிறப்பான ஆட்சி அவனுடையது இலங்கை மக்களுக்கு. சத்திரியர் முதல் சூத்திரர் வரை அனைவருமே ஆரியர்கள் தான் இந்தியாவில். அந்த வகையில் கொண்டால் வடஇந்தியாவில் பிறந்த பிராமணனான இராவணனும் ஆர்யன். அதாவது இந்திய ஆரியன் வகையில் வருவார். ஆரியர்கள் பல தேசங்களில் வெவேறாக முற்றிலும் வேறாக இருக்கிறார்கள். ஜெர்மானிய ஆரியர்களும் உண்டு, ஈரானிய ஆரியரக்ளும் உண்டு. ஒருவருக்கொருவர் தொடர்பில்லை. அதற்குள் போகவேண்டாம் இப்போதைக்கு நாம். இந்தியா முழுதும் வாழ்ந்தவர்கள் தமிழர்களே என்றும் அவர்கள் நாகதேவதையை வழிபடுபவர்கள் என்றும் சிவனின் கழுத்தில் இருக்கும் நல்ல பாம்பும், விஸ்ணு படுக்கையாக இருக்கும் ஆதிசேஷனும் நாங்களே தமிழர்களின் அன்றைய பிரதான கடவுள் என்றோரும் உண்டு. ஆக பாரதம் முழுதும் வியாபித்திருந்த தமிழியர்களை தெற்கே விரட்டி விட்டு வடக்கே ஆரியர்கள் பிடித்து கொண்டார்கள் என்போரும் உண்டு. இவை அனைத்துமே காணக்கிடக்கின்ற செய்திகள். மலரின் மகளுக்கு எதுவும் தெளிவாக தெரியாது. படித்து கொண்டும் கேட்டு கொண்டும் உண்மையை அறிந்து கொள்ளும் ஆர்வமும் மட்டுமே இப்போதைக்கு. இராவணன் தமிழன் என்று எந்த இலக்கிய இதிகாசங்களும் சொல்லவில்லை என்கிறார்கள். திராவிட இயக்கத்தினர் கட்டிய புரட்டு கதை என்று பலர் இன்று சொல்கிறார்கள், இராவணன், கம்சன், நரகாசுரன் அதாகப்பட்டது என்னவெனில் அசுரர்கள் மிகைபழம்பொருந்திய அசுரர் ராஜாக்கள் அனைவரையும் தமிழர்கள் என்று புனைந்து விட்டார்கள் என்று சொல்கிறார்கள். சங்க காலத்திற்கு முந்தைய தகவல்களை க்ருய்ப்புக்களை அவர்கள் சொல்வது இல்லை. மாறாக நூறு ஆண்டுகளில் ஒரு சிலர் புனைந்த கட்டுரைகள் கதைகளை மேற்கோள் காட்டுவார்கள், அல்லது இவர்களே கூட அப்போது ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்பு எழுதிய புரட்டாகவும் இருக்கலாம். அதெல்லாம் இருக்கட்டும் வேறுபபுறம். இராவண்னுக்கு தமிழகத்தில் கோவில் இல்லை. வடஇந்தியாவில் நிறைய கோவில்கள் உண்டு. அரசனை தெய்வமாக வணங்குவதும் ஒரு மரபே. அரசனின் உறைவிடம் கோவில் தான். இராவணன் பிறந்தது கன்யாகுப்ஜ பிராமண குலம், தேஜ் குப்ஜ என்று சொல்கிறார்கள். தசரவை வடநாட்டில் துர்க்கை வழிபாடாக கொள்வதில்லை, இராமன் இராவணனை வாதம் செய்த பண்டிகையாக கொண்டாடுவார்கள். அன்று கன்யாகுப்ஜ, தேஜ் குப்ஜ பிராமணர்கள் கொண்டாடுவதில்லை, மாறாக முன்னோர்களுக்கு திதி கொடுப்பதாக தங்கள் குலத்தில் உதித்த முன்னோன் இராவணனுக்கு திதி கொடுக்கிறார்கள். அது இன்றும் தொடர்கிறது. இது ஆர்யர் சம்பந்தமாக தெரிகிறது. தமிழ் சம்பந்தமாக என்ன சொல்வது. இலங்கையில் பெரும்பாலான மக்கள் இராவணனின் ஆட்சியின் பொது இருந்தவர்கள் நாகர்கள் என்று சொல்லப்படும் தமிழர்களே. அவர்களின் கடவுளாக அதாவது அரசனே கடவுள் என்றவகையில் இராவணன் இறைவனாக போற்றப்பட்டவன். அந்த நாகர்கள் இராவணனின் மெய்காப்பாளர்கள். அன்றெல்லாம் இறப்பு என்பது சர்ப்பம் தீண்டி தான் பெரும்பாலும் நடந்திருக்கிறது. நாகம் இராவணனை தீண்டுவதில்லை, நாகர்கள் அவனுக்கு மெய்க்காப்பாளர்கள் என்பதால். இது இலங்கையில் வரையப்படும் செவிவழி கதைகல்ப்பாற்பட்டது. இராவணனுக்கு சிறப்பில்லை. சாக வரம் பெற்றவன், துருவ நட்சத்திரம், அஸ்வத்தாமன், மார்க்கெண்டேயன் சப்தரிஷிகள் போல. ஆகையால் அவனுக்கு இறப்பு இல்லை. இராமனால் அவனை கொல்ல முடியாது, நீண்ட எழுந்திராவியலாத நிரந்தர மயக்க நிலையில் இராவணனனை ராமபானம் செய்துவிட்டது. இராவணன் இறக்கவில்லை. மேலும் பிறந்திருந்தாலும் உடல் இருந்தால் அவனை உயிர்ப்பிக்கமுடியும். ஆணாமவிற்கு அது அணிந்திருந்த அதே பழைய சட்டைதான் தேவை உயிர்ப்பிப்பதற்கு என்று நம்புவோர் நிறையபேர் பிரிடீஷாரின் ஆட்சிக்காலம் வரையில் கூட இருந்தார்கள். இரண்னன் நெடுந்துயில் கொண்டவுடன் அவனது உடலை, நாகர்கள் தங்கள் லோகத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள். இருவறையில் அவனது நீண்ட துயிலை கலைக்கவோ அல்லது இறந்தவனை உயிர்ப்பிக்கவோ முயற்சித்து கொண்டே இருக்கிறார்கள் என்று நம்பிகை உண்டு. இலங்கையில் நாங்கள் கேட்டு அறிந்ததது அங்குள்ள தமிழர்களிடம். இராமேஸ்வரத்தில் தள்ளாடி பகுதியில் இருந்து அங்கு சென்று குடிபெயர்ந்த தமிழ் முதியவரிடம் கேட்டு அறிந்தது. இலங்கைக்கு இராமாயண சுற்றுலாவிற்கு அமர லங்கா சுற்றுலா துறையினர் மூலம் சென்ற பொது. நானும் எனது குடும்பத்தாரும் அசோகா வாடிகாவை நிர்வகிக்கும் முத்துமாரி அம்மன் அறக்கட்டளையின் ஆயுட்கால உறுப்பினர்கள். நுவர எலியாவிற்கு பலமுறை சென்று வருவோம். இலங்கை இதை மேற்கொண்டு செய்யும் பட்சத்தில் இந்தியாவிலிருந்து நிறைய சுற்றுலா பயணிகள் குறிப்பாக வடநாட்டவர்கள் அங்கு சென்று வருவார்கள். இந்திய சுற்றுலா பயணிகளை பெரிதும் நம்பி இருக்கும் இலங்கைக்கு இது மிகப்பெரிய பொருளாதார மேம்பாட்டை நல்கும். இந்தியர்களை இலங்கையின் மிகவும் பெருமிதமாக வரவேற்பார்கள். என்டக வரிசையிலும் நிற்கவேண்டாம் சிறப்பு வழியிலேயே அனைத்து இடங்களுக்கும் செல்லலாம். இந்தியாவிலிருந்து வந்திருக்கும் டூரிஸ்ட் என்று சொல்லி அமர லங்காவின் சுற்றலா அமைப்பாளர்கள் அனைத்து பகுதிகளுக்கும் அழைத்து சென்று வரிசை என்பதே இல்லாமல் சிறப்பு சேவை செய்தார்கள். கண்டி கதிர்காம கூட சென்று வந்தோம். விழாக்கள் நடக்கும் அன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் விழா நடக்கும் பகுதிக்குஸ் எல்லா போலீஸ் அனுமதி இல்லை. எங்களின் வாகநந்தை எந்த தடையும் இல்லாமல் அனுமதித்தார்கள். இலங்கை பற்றிய எதிர்மறையான எண்ணம் கூடாது என்பதற்காக மெர்சில வரிகள் சொல்லியிருக்கிறேன். ஒரே ஒரு வினவுடன் இன்று இந்த கருத்தை நிறைவு செய்கிறேன். பத்து தலை இராவணனனுக்கு பத்து தலைகளை நேராக ஒரே வரிசையில் வைத்தது யார்? அதுவும் இடது பக்கம் நான்கு, வலதில் ஐந்து என்று?
Rate this:
Cancel
Raja - Coimbatore,இந்தியா
16-நவ-202113:13:43 IST Report Abuse
Raja கடனில் தவிக்கும் இலங்கைக்கு இது தேவை இல்லாத வேலை. 20 லட்ச ரூபாயில் இவ்வளவு பெரிய ஆய்வு நடத்த முடியாது. பனி ஓய்வு பெற்ற சிலருக்கு மறைமுகமாக உதவும் முயற்சியாகவே தெரிகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பதை விட நூறு வருடங்கள் கழித்து நமக்கு என்ன தேவைப்படும் என்பதை கண்டுபிடிக்க முயற்சித்தால் பயனாக இருக்கும்.
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
16-நவ-202112:39:57 IST Report Abuse
mohan பத்து தலை ராவணன் என்பது, உண்மையிலியே, பத்து தலைகள், இருப்பதாக இருக்காது.. வேறு ஏதாவது காரணம் இருக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X