பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் மாநகராட்சி மேயர்பதவிக்கு தயாராகும் கட்சிகள்

Added : நவ 16, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : நகர்புற தேர்தல் அறிவிப்பு நெருங்கும் நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் பதவிக்கு யாரை களம் காண வைப்பது என்பது குறித்த பட்டியலை தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள் தயார் செய்து வருகின்றது.திண்டுக்கல் மாநகராட்சியை பொறுத்தவரையில் மேயர் பதவிக்கு பெண் தான் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், திண்டுக்கல் நகர தி.மு.க., வில் விறுவிறுப்பாக களம்காண

திண்டுக்கல் : நகர்புற தேர்தல் அறிவிப்பு நெருங்கும் நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் பதவிக்கு யாரை களம் காண வைப்பது என்பது குறித்த பட்டியலை தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள் தயார் செய்து வருகின்றது.

திண்டுக்கல் மாநகராட்சியை பொறுத்தவரையில் மேயர் பதவிக்கு பெண் தான் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், திண்டுக்கல் நகர தி.மு.க., வில் விறுவிறுப்பாக களம்காண பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்த வாரம் நடந்த தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியினர் தீவிரமாக களமிறங்கி பணியாற்ற வேண்டுமென அமைச்சர் ஐ.பெரியசாமி வேண்டுகோள் விடுத்தார். மேயர் பதவி மறைமுக தேர்தல் மூலம் நடக்கலாம் என்று நிலைப்பாடும்

ஒரு புறம் உள்ளது. இருப்பினும் 48 வார்டுகளிலும் போட்டியிட கட்சியினரிடையே மிகுந்த ஆர்வமும், போட்டியும் உருவாகியுள்ளது.கடந்தமுறை இறுதி செய்யப்பட்ட மாநகராட்சி பட்டியலில் கிட்டத்தட்ட 24 க்கும் மேற்பட்ட வார்டுகளில் பெண்களுக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தி.மு.க., சார்பில் களமிறங்க சமூக சேவகர், சமூக ஆர்வலர், மருத்துவர், வழக்கறிஞர், பொறியியல் பட்டதாரிகள், இல்லத்தரசிகள், மாஜி கவுன்சிலர்கள் என பட்டியல் நீள்கிறது.அ.தி.மு.க.,வுக்கு நகரின் முதல் மேயராக இருந்த கட்சி என்ற பெயர் உள்ளது. இந்தமுறை பெண் மேயர் என்பதால் இல்லத்தரசி, மகள், மருமகள் என்ற பட்டியலும் தயாராகிவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதம், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே மேயர் பதவி மட்டும் நேரடி தேர்தல் மூலம் நடத்த முதல்வருக்கு அனைத்து தி.மு.க., மாவட்ட செயலர்களும் அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X