மாணவர்களுக்கான இணைய வழி கட்டுரை போட்டிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கான இணைய வழி கட்டுரை போட்டிகள்

Added : நவ 16, 2021
Share
திருப்பரங்குன்றம் : இந்தியா, பூடான் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் தகவல் மையம், அமைதி மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான காந்தி கல்வி நிறுவனம் சார்பில்மதுரை ஸ்ரீ ராம் சந்திரா மிஷன் உதவியுடன் இணையவழி கட்டுரை போட்டிகள் நடக்கிறது.பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் நன்னெறி சார்ந்த எண்ணங்களை வளர்க்க, இளம் வயதில் ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படுத்த இப்போட்டிகள் நடக்கிறது. ஐ.நா.,

திருப்பரங்குன்றம் : இந்தியா, பூடான் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் தகவல் மையம், அமைதி மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான காந்தி கல்வி நிறுவனம் சார்பில்மதுரை ஸ்ரீ ராம் சந்திரா மிஷன் உதவியுடன் இணையவழி கட்டுரை போட்டிகள் நடக்கிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் நன்னெறி சார்ந்த எண்ணங்களை வளர்க்க, இளம் வயதில் ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படுத்த இப்போட்டிகள் நடக்கிறது. ஐ.நா., சபையின் அங்கீகாரம் பெற்ற 6 மொழிகள் மற்றும் இந்தியாவின் 9 மொழிகளில் மாணவர்கள் பங்கேற்கலாம்.

கருணை நமக்காக, கருணை மற்றவர்களுக்காக, கருணை சுற்றுச்சூழலுக்கு தலைப்புகளில் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு மொழி பிரிவிலும் பரிசு வழங்கப்படும். முதல் பரிசு ரூ 30,000, 2வது பரிசு ரூ. 22,500 வழங்கப்படும். நவ.,30க்குள் hfn.link/essayevent இணையதளத்திலும், essayevent@heartfulness.org இ மெயிலிலும் முன்பதிவு செய்யலாம். விவரங்களுக்கு 70102 15515, 79041 26446ல் தொடர்பு கொள்ளலாம் என மிஷன் ஒருங்கிணைப்பாளர் குருநாதன் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X