பொது செய்தி

தமிழ்நாடு

தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

Added : நவ 16, 2021
Share
Advertisement
வத்தலக்குண்டு : இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களை தேர்ந்தெடுப்பதற்காக தலைமையாசிரியர்களுக்கு வட்டார வள மையத்தில் பயிற்சி முகாம் நடந்தது.ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இடைநிற்றல், கற்றல் இழப்பு ஏற்படாத வண்ணம் நாள்தோறும் மாலை 5:00 முதல் 7:00 மணி வரை தன்னார்வலர்களை கொண்டு அந்தந்த பகுதிகளில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வத்தலக்குண்டு : இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களை தேர்ந்தெடுப்பதற்காக தலைமையாசிரியர்களுக்கு வட்டார வள மையத்தில் பயிற்சி முகாம் நடந்தது.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இடைநிற்றல், கற்றல் இழப்பு ஏற்படாத வண்ணம் நாள்தோறும் மாலை 5:00 முதல் 7:00 மணி வரை தன்னார்வலர்களை கொண்டு அந்தந்த பகுதிகளில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் தன்னார்வலர்களை தேர்ந்தெடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

மாவட்டக் கல்வி அலுவலர் பாண்டித்துரை, பி.டி.ஓ., ஜெயச்சந்திரன் தலைமை வகித்தனர். ஆண்கள் பள்ளி தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன், பள்ளி துணை ஆய்வாளர் சென்றாயன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் ராஜன் எஸ்தர் வரவேற்றார். வட்டார ஒருங்கிணைப்பாளர் முருகன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X