பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் பரவலாக கனமழை

Added : நவ 16, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல், பழநி, கொடைக்கானல் என நேற்று பரவலாக மழை பெய்தது.மாவட்டத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று (நவ.15) மிக கனமழை, இன்று (நவ.16) திண்டுக்கல் உட்பட 16 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நேற்று மதியம் வரை வெயில் வாட்டி வதைத்தது. மாலை 4:00 மணிக்கு பின் கன மழை பெய்தது. இதே போல் சீலப்பாடி, செட்டிநாயக்கன்பட்டி, தாடிக்கொம்பு,

திண்டுக்கல் : திண்டுக்கல், பழநி, கொடைக்கானல் என நேற்று பரவலாக மழை பெய்தது.மாவட்டத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

நேற்று (நவ.15) மிக கனமழை, இன்று (நவ.16) திண்டுக்கல் உட்பட 16 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நேற்று மதியம் வரை வெயில் வாட்டி வதைத்தது. மாலை 4:00 மணிக்கு பின் கன மழை பெய்தது. இதே போல் சீலப்பாடி, செட்டிநாயக்கன்பட்டி, தாடிக்கொம்பு, பொன்னகரம் ஆகிய இடங்களிலும் மழை பெய்தது. ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

பழநிபழநி சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று மாலை மழை பெய்தது. இதனால் நகரில் குளர்ச்சியான சூழல் உருவானது.நடவு பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளம், முருங்கை, தக்காளி, காலிபிளவர் உள்ளிட்ட பயிர்கள் நடவு செய்யப்பட்டு வருகின்றது.கொடைக்கானல்கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நன்கு மழை பெய்தது. சில தினங்கள் மழை ஓய்ந்திருந்த நிலையில், நேற்று மதியம் முதல் மீண்டும் கனமழை பெய்தது. மன்னவனூர், தாண்டிக்குடி , பண்ணைக்காடு மற்றும் கொடைக்கானல் நகரில் நேற்று மதியம் 3:00 மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது பெய்து கொண்டே இருந்தது. இடி, மின்னலுடன் மழை பெய்ததால் ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பெரும்பாலான மலைக்கிராமங்களில் மின்தடை ஏற்பட்டு கிராமங்கள் இருளில் மூழ்கின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X