பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் இடம் பெற வழக்கு

Added : நவ 16, 2021
Share
Advertisement
மதுரை : மத்திய அரசின் அலுவலகங்களில் தமிழ் இடம் பெற தாக்கலான வழக்கு விசாரணையை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.துாத்துக்குடி மாவட்டம் கடம்பூர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:அரசியல் சாசனத்தின் 8 வது அட்டவணையில் உள்ள இதர 20 மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட 85 கோடி பேருக்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாததால் மத்திய அரசின் சேவைகளை பெறும் உரிமை

மதுரை : மத்திய அரசின் அலுவலகங்களில் தமிழ் இடம் பெற தாக்கலான வழக்கு விசாரணையை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

துாத்துக்குடி மாவட்டம் கடம்பூர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:அரசியல் சாசனத்தின் 8 வது அட்டவணையில் உள்ள இதர 20 மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட 85 கோடி பேருக்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாததால் மத்திய அரசின் சேவைகளை பெறும் உரிமை மறுக்கப்படுகிறது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.அட்டவணையில் உள்ள இதர 20 மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்.

முதற்கட்டமாக தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஹிந்தி, ஆங்கிலத்துடன் தமிழ் இடம் பெற வேண்டும். மத்திய அரசின் துறை சார்ந்த தகவல், சேவைகளை தமிழில் அறிந்துகொள்ளும் வசதியை ஏற்படுத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு செல்வகுமார் மனு செய்தார்.நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X