பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடையை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : நவ 16, 2021
Share
Advertisement
மதுரை : துாத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் ஊராட்சித் தலைவர் கிருபா. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மெஞ்ஞானபுரத்தில் திருச்செந்துார் செல்லும் சாலை பஸ் ஸ்டாப்பில் டாஸ்மாக் கடை உள்ளது. மது அருந்துபவர்களால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. சமாதானக் கூட்டத்தில் கடையை வேறு இடத்திற்கு மாற்ற அரசுத் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

மதுரை : துாத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் ஊராட்சித் தலைவர் கிருபா. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மெஞ்ஞானபுரத்தில் திருச்செந்துார் செல்லும் சாலை பஸ் ஸ்டாப்பில் டாஸ்மாக் கடை உள்ளது.

மது அருந்துபவர்களால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. சமாதானக் கூட்டத்தில் கடையை வேறு இடத்திற்கு மாற்ற அரசுத் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. நடவடிக்கை இல்லை. அருகில் மாணவர் விடுதி உள்ளது. துாத்துக்குடி கலெக்டர், டாஸ்மாக் மதுரை மண்டல மேலாளருக்கு மனு அனுப்பினோம். கடையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு: கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் அல்லது மூட வேண்டும். இல்லையெனில் நிரந்தரமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டு நாளை (நவ.,17) ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X